ஜப்பான் நாட்டிலுள்ள டோக்கியோவில் பிப்ரவரி மாதம் இறுதியில் நடைபெற்ற ஏலத்தில் 46 மில்லியன் யென்னிற்கு கோப்பை ஒன்று விலைபோயுள்ளது. அது என்னன்னு கேக்குறீங்களா… சீனாவின் மிங் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திய நீலம் மற்றும் வெள்ளை நிறத்திலான கோப்பையாகும்.
இக்கோப்பை பீங்கானால் செய்யப்பட்டுள்ளது. இதனை சீன நாட்டைச் சேர்ந்தவர் வாங்கியுள்ளார். இதுதான், இதுவரை டோக்கியோவில் நடைபெற்ற ஏலத்திலேயே அதிகபட்ச விலையாகும்.சமீபகாலமாக சீன உள்நாட்டு கலைப் பொருட்களான சந்தை சுறுசுறுப்பாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக உள்ள பொருளாதார மந்த நிலையிலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
தற்போது, சீனாவில் உள்ள கலைப் பொருட்களை சேகரிப்பவர்களும், முதலீடு செய்பவர்களும் தங்களது பார்வையை சர்வதேச அளவில் செலுத்தியுள்ளனர். இதனால், சீனாவில் உள்ள கலைபொருள் சேகரிப்பாளர்கள் ஜப்பானிற்கு வந்து, மிகவும் அரிதான மற்றும் சீனாவின் பெருமையைக் கூறும் கலைப் பொருட்களை அதிக விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர்.இதுகுறித்து, இந்த ஏலத்தை நடத்திவரும் ஹிடாரி அகிகோ தெரிவிக்கையில், சீனர்களை குறிவைத்து, சீனக் கலைப்பொருட்களை ஏலம் விடுவது இதுதான் முதல்முறை.
மேலும், இதன் முடிவு எனக்கு மிகவும் திருப்திகரமாகவுள்ளது.மேலும் இதுகுறித்து பார்வையாளர் ஒருவர் தெரிவிக்கையில், இந்த ஏலத்தில் சீனா மற்றும் ஜப்பானிலிருந்து பெறப்பட்ட ஓவியம், கலைப் பொருட்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஏராளமானோர் இதில் கலந்து கொண்டு, தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்கிச் சென்றனர். சிலர், மதிப்பீட்டாளர்களோடும் வந்திருந்து பொருட்களை வாங்கிச் சென்றனர். மேலும், சீனாவோடு ஓப்பிடுகையில், இங்குள்ள பொருட்களின் விலை வாங்கு வோரை கவர்வதாகவும் உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: