புதுதில்லி, மார்ச் 2-
இந்தியாவுக்கும் சீனாவுக் கும் இடையில் இயல்பு நிலை யைக் கொண்டுவருவதற்கு உத விடும் வகையில் இரு நாட்டு அயல்துறை அமைச்சர்களுக் கும் இடையே வியாழனன்று பேச்சுவார்த்தைகள் நடை பெற்றன. முதலில் இருநாடு களுக்கும் இடையே கடல் சார்ந்த பகுதிகளில் உள்ள பிரச்சனைகளைத் தீர்த்திடக் கூடிய விதத்தில் பேச்சுவார்த் தைகள் தொடங்கின.இரு நாடுகளுக்கும் இடை யே இதுதொடர்பாக பேச்சு வார்த்தை நடைபெறுவது இதுவே முதல் தடவையாகும்.
தில்லி வந்துள்ள சீன அயல்துறை அமைச்சர் யாங் ஜியாசி, இந்திய அயல்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ் ணா ஆகியோருக்கு இடையே தில்லி, ஹைதராபாத் ஹவுசில் இப்பேச்சுவார்த்தைகள் நடை பெற்றன.இந்திய-சீன நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த் தைகள் தொடர்பாக அயல் துறை அமைச்சகத்தின் கிழக்கு ஆசியப் பிரிவு இணைச் செய லாளர் கவுதம் பாம்பாவாலே, ‘‘இந்தியாவும் சீனாவும் நீண்ட கடற்கரைகளைக் கொண்ட நாடுகளாகும். கடல் சார்ந்த பிரச்சனைகள் தொடர் பாகப் பேச்சுவார்த்தைகள் நடத்துவது உபயோகமான தாக இருந்திடும் என்று இரு நாடுகளும் கருதின ’’ என்று தெரிவித்தார்.
இம்மாத இறுதியில் இந்தி யாவில் நடைபெறவுள்ள ‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்ரிக்கா ஆகிய நாடு கள் பங்கேற்கும் உச்சி மாநாட் டில் கலந்து கொள்வதற்காக சீன அதிபர் ஹூஜிண்டாவோ வருகை தருகிறார். அதற்கு முன் இருநாடுகளுக்கும் இடையில் உள்ள கடல்சார்ந்த பிரச்ச னைகளுக்கு முடிவு கட்டி னால் பதற்றம் குறையும் என்று இரு நாடுகளுமே கருது கின்றன. ‘நல்ல அண்டைநாட்டுக் காரர்களாக, பரஸ்பரம் உத விடக்கூடிய விதத்தில் ஆழ மான முறையில் ஒத்துழைப்பு நல்குபவர்களாக, இந்திய – சீன உறவுகளை மேம்படுத்திட சீனம் எப்போதும் தயாராக இருக்கிறது’ என்று சீனத் தலைவர் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகள் தொடர்பாக மத்திய அயல் துறை அமைச்சர் கிருஷ்ணா கூறுகையில், இரு நாடுகளுக் கும் இடையே ராணுவ ரீதி யாக ஒத்துழைப்பை வளர்த் துக் கொள்வதையே இந்தியா விரும்புகிறது என்றார்.மிகவும் சிக்கலான எல் லைப் பிரச்சனை தொடர்பாக கிருஷ்ணா கூறுகையில், இரு நாட்டின் சிறப்புப் பிரதிநிதி களின் 15ஆவது சுற்றுப் பேச்சு வார்த்தைகள் ஜனவரியில் நடைபெற்றன. இவர்களின் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த் தை அடுத்த வாரம் சீனத் தலை நகர் பெய்ஜிங்கில் நடை பெறும் என்றும் தெரிவித்தார். இரு நாட்டின் எல்லைகளி லும் அமைதியையும் சுமுக மான நிலையினையும் ஏற் படுத்த வேண்டும் என்பதே பேச்சுவார்த்தைகளின் முக்கிய குறிக்கோள் என்றும் அவர் தெரிவித்தார்.மத்திய அயல்துறை அமைச்சக செய்தித் தொடர் பாளர் அக்பருதீன் கூறுகை யில், 2012ஆம் ஆண்டை இந் திய-சீன நட்புறவு மற்றும் கூட் டுறவு ஆண்டாகக் கொண் டாடக் கூடிய விதத்தில் விரி வான திட்டம் ஒன்றை இரு நாடுகளும் விரைவில் அறி விக்க இருப்பதாகவும் தெரி வித்தார். (ந.நி.)

Leave a Reply

You must be logged in to post a comment.