நாமக்கல், மார்ச் 2-
சமையல் எரிவாயு ஏற்றி செல்லும் எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையா ளர்கள் பிப். 29ம் தேதி நள் ளிரவு முதல் வேலை நிறுத் தத்தில் ஈடுபட்டு வருகின் றனர். வாடகை உயர்வு, அனைத்து வண்டிகளுக்கும் வேலைவாய்ப்பு போன்ற கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழகம், கேரளா, ஆந் திரா, கர்நாடகா, புதுவை ஆகிய 5 மாநிலங்களில் வேலை நிறுத்தம் நடை பெறுகிறது. இதனால் சமை யல் எரிவாயு விநியோகம் முடங்கியுள்ளது. 4 ஆயிரம் எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரிகள் ஆங்காங்கே நிறுத் தப்பட்டுள்ளன.5 மாநிலங்களிலும் மத் திய அரசுக்கு சொந்தமான ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய 3 எண்ணெய் நிறுவனங் களுக்கு 9 சுத்திகரிப்பு நிலை யங்களும், 50 பாட்டிலிங் பிளான்ட்களும் உள்ளன. சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து டேங்கர் லாரிகளில் எடுத்து வரப்படும் சமையல் கேஸ் பாட்டிலிங் பிளான்ட் களில் இறக்கப்படுகிறது. தினமும் 10 ஆயிரம் டன் சமையல் கேஸ் பாட்டிலிங் பிளான்ட்களில் இறக்கப் படும். கேஸ் டேங்கர் லாரி வேலை நிறுத்தம் காரண மாக கடந்த 2 நாளில் 20 ஆயி ரம் டன் சமையல் எரிவாயு சிலிண்டர் எடுத்து செல்வது பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்தம் காரண மாக லாரி உரிமையாளர் களுக்கு தினமும் ரூ.3 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள் ளது.இந்நிலையில் வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக அரசு முத்தரப்பு பேச்சு வார்த் தைக்கு ஏற்பாடு செய்துள் ளது. சனிக்கிழமையன்று (மார்ச் 3) சென்னையில் இந்த பேச்சுவார்த்தை நடக் கிறது. இது குறித்து தென் மண்டல எல்.பி.ஜி. கேஸ் டேங்கர் லாரி உரிமையா ளர்கள் சங்க தலைவர் பொன் னம்பலம் கூறியதாவது:தமிழக அரசின் நுகர் பொருள் வழங்கல் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் சென்னையில் சனிக் கிழமை முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. இதில் கலந்து கொள்ளும்படி எங் களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது. சென்னையில் மார்ச் 3 அன்று காலை 11 மணிக்கு பேச்சுவார்த்தை நடக்கிறது. ஏற்கனவே கடந்த ஜனவரி 18ம் தேதி இது போன்று நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் போது ஆயில் நிறுவன அதிகாரி கள் அளித்த உறுதி மொழியை ஏற்று அப்போது வேலை நிறுத்தத்தை விலக்கிக் கொண்டோம். தற்போது மீண்டும் தமிழக அரசு பேச்சு வார்த்தைக்கு அழைத்துள் ளது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: