போபால், மார்ச் 2-
தகவல் அறியும் உரிமை ஆர்வலர் ஷேக்லா மசூத் கொலைவழக்கில் தொடர் புடைய நபருடன் மத்தியப் பிரதேச பாஜக தலைவர் பிர பாத்ஜா இருக்கும் புகைப் படம், அவருக்கு பெரும் நெருக்கடியைத் தந் துள்ளது.தகவல்அறியும் உரிமை ஆர்வலர் ஷேக்லா மசூத் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், தனது வீட்டிற்கு முன்பாக, காரில் இருந்த நிலையில் கொல்லப்பட் டார். மத்தியப்பிரதேச மாநி லத்தை உலுக்கிய இந்தக் கொலையில் தொடர்புடை யவர் எனக்கருதப்பட்ட சாகிப் என்ற சாகிப் டேங் கரை செவ்வாய்க்கிழமை யன்று சிபிஐ கைது செய் தது.
இந்த நபர், 2011ம் ஆண்டு பாஜக தலைவர் பிரபாத் ஜாவுக்கு, மாலை அணிவித்த காட்சி புகைப் படத்தில் தெரியவந்துள் ளது. பொது வாழ்க்கையில், தொடர்புடைய நபர், ஏரா ளமான நபர்கள் என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். இப்படி படம் எடுத்துக்கொள்வ தால் அந்த நபர்களுடன் எனக்குத் தொடர்பு இருப்ப தாக அர்த்தம் கிடையாது என ஜா கூறினார்.இது தீவிரமான விஷயம் என தற்போது நடந்த சட்ட மன்றக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் பிரச்சனையை எழுப்பியது. சட்டமன்றத்தில் எதிர்க்கட் சித் தலைவரான அஜித்சிங் கூறுகையில், இது மிகத் தீவிரமான விஷயம். ஜா தார்மீகப் பொறுப்பேற்று உடனடியாக பதவிவிலக வேண்டும். கிரிமினல்களை வெளிப்படையாக பாஜக மாநில அரசு பாதுகாத்து வருகிறது; ஆதரித்தும் வருகி றது என குற்றம் சாட்டி னார்.
தேடப்படும் கிரிமினல் களுடன் கடந்த மாதம் பாஜ கவின் மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவு கான் புகைப்படம் எடுத்துக் கொண்டார் என்றும் அவர் கூறினார்.இதற்கிடையே ஷேக்லா மசூத் கொலையில் குற்றம் சாட்டப்பட்டு, கைதான போபால், கட்டுமான கலை ஞர் திருமதி சாகிதா பெர் வஸ், தன் மீதான குற்றச் சாட்டுகளை மறுத்தார். சிபிஐ என்னை கொடுமைப் படுத்தும் சூழலில், நான் செய்யாத குற்றத்தை ஒப் புக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவேன் என்றார். தொலைபேசி உரையாடல் பதிவுகள் நான் நிரபராதி என்பதை உறுதிப் படுத்தும். ஒரு கிரிமினல் என் பெயரைக் கூறியதால், குற்றச்சாட்டுக்கு ஆளாகி யுள்ளேன் என அவர் தெரி வித்தார். தனது கணவருடன் ஷேக்லா தொடர்பு வைத் திருக்கலாம் என்ற சந்தேக நிலையில், அவரை கட்டு மான கலைஞர் கொலை செய்ய உத்தரவிட்டிருக்க லாம் என உள்ளூர் ஊடகங் கள் கூறுகின்றன.

Leave A Reply

%d bloggers like this: