திருவாரூர், மார்ச் 2-
விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயரிய மருத்துவ சிகிச்சை பெற ஏதுவாக பயனாளி களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத்திட்ட அடை யாள அட்டைகள் வழங்கப் பட உள்ளன.அதன் முதல்கட்டமாக திருவாரூர் மாவட்டம் நன் னிலம் வட்டத்திற்கு 27 ஆயி ரத்து557 அடையாள அட் டைகள் வரப்பெற்றுள்ளன. வரப்பெற்ற அடையாள அட்டைகள் நியாயவிலைக் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு வழங்கப்படும். ஏற்கெனவே மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் புகைப்படம் எடுத்த பொது மக்கள் அவர்களுக்குரிய நியாயவிலைக் கடையில் குறிப்பிட்ட தேதியில், குடும்ப அட்டையினை காண்பித்து காப்பீட்டுத் திட்ட அட்டைகளைப் பெற் றுக்கொள்ளலாம் என திருவாரூர் மாவட்ட ஆட் சியர் சி.நடராசன் தெரிவித் துள்ளார். சனிக்கிழமையன்று (மார்ச் 3) பாவாட்டக்குடி, அன்னதானபுரம், தாளை யூர், பனங்காட்டான்குடி, நெடுங்குளம் காளியாகுடி, கடகம், பண்டாரவாடை, கடுவன்குடி, கொட்டூர், திரு மெய்ச்சூர், மகாராஜபுரம், போழக்குடி, நாடாகுடி, பருத்தியூர், கூத்தனூர்-34, கடககுடி, அய்யம் பேட்டை, கொத்தவாசல், மருதுவாஞ் சேரி, நெம்மேலி செம்பிய நல்லூர், செருவலூர், ரெட் டகுடி, அகரதிருமாளம், கோவில்திருமாளம், முடி கொண்டான், பூந்தோட் டம் ஆகிய ஊர்களிலும், ஞாயிற்றுக்கிழமை விச லூர், மகிழஞ்சேரி, சொரக் குடி, நாககுடி, குவளைக் கால், மூங்கில்குடி, பில்லூர், நீலங்ககுடி, வண்டாம் பாளை, பெரும்புகளூர், கொல்லுமாங்குடி, நன்னி லம், மாப்பிள்ளைகுப்பம், பேரளம், அச்சுதமங்கலம், வாழ்க்கை, ஸ்ரீவாஞ்சியம், அதம்பார், கொல்லாபுரம், கீரனூர் ஆகிய ஊர்களிலும் காப்பீட்டுத் திட்ட அடை யாள அட்டைகள் வழங்கப் படும்.

Leave A Reply

%d bloggers like this: