சென்னை, மார்ச் 2-
தமிழகத்தில் வெவ்வேறு விபத்தில் பலியான இருவ ரின் குடும்பத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா தலா ஒரு லட்சம் நிதி உதவி வழங் கினார்.இது பற்றி தமிழக முதல் வர் ஜெயலலிதா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:காஞ்சீபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் வாயலூர் கிராமம், கிழக்கு கடற்கரைச் சாலையில் கடந்த 29-ந் தேதி இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது அரசு பஸ் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் பயணம் செய்த ஆயப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த லோகநாதன் என் பவரின் மகன் வினோத் குமார் பலத்த காயம் அடைந்து மருத்துவம னைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந் தேன்.இந்தச் சாலை விபத்தில் அகால மரணமடைந்த வினோத்குமார் குடும்பத் திற்கு எனது ஆழ்ந்த இரங் கலையும் அனுதாபத்தை யும் தெரிவித்துக் கொள்கி றேன். அவரது குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் அய்யனார் காலனியில் இயங்கி வரும் தனியார் தீப்பெட்டித் தொழிற் சாலையில் 20ம் தேதி ஏற் பட்ட தீ விபத்தில் சரஸ்வதி பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவ ரின் மனைவி ராமுத்தாய் படுகாயமடைந்து மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வியாழ னன்று (மார்ச் 1) உயிரிழந் தார் என்ற செய்தியை அறிந்த நான் மிகவும் துயரம் அடைந்தேன்.இந்த விபத்தில் அகால மரணமடைந்த ராமுத்தாய் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனு தாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலி ருந்து வழங்க நான் உத்தர விட்டுள்ளேன்.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Leave A Reply