சேலம், மார்ச் 2-
வர்த்தக எரிவாயு சிலிண் டர் விலை கடந்த மாதத்தை காட்டிலும் திடீரென்று ரூ.121.50 உயர்த்தப்பட்டுள் ளது. நடப்பு மார்ச் மாதத் திற்கு இதன் விலை ரூ.1667.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள் ளது.ஓட்டல்கள், டீக்கடை களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த் தக காஸ் சிலிண்டர்களுக்கு மத்திய அரசு மானியம் வழங் குவதில்லை. அவ்வப்போது, நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரம், சந்தை தேவை, டாலர் விலை அடிப் படையில் எண்ணெய் நிறு வனங்களின் கூட்டமைப்பு மாதத்திற்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்கின்றன.கடந்த ஜனவரி மாதம் டேங்கர் லாரி வேலை நிறுத் தம் காரணமாக வீட்டு உப யோக மற்றும் வர்த்தக எரி வாயு சிலிண்டர்களுக்கு சந் தையில் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால் கடந்த பிப்., மாதத்தில் வர்த்தக சிலிண்டர் விலையை அதற்கு முந்தைய மாதத்தைக் காட்டி லும் ரூ.88.50 உயர்த்தி, ரூ.1546 ஆக நிர்ணயம் செய்யப்பட் டது.இந்நிலையில், எண் ணெய் நிறுவனங்களின் கூட் டமைப்பு, நடப்பு மார்ச் மாதத்திலும் வர்த்தக காஸ் சிலிண்டர் விலையை கடந்த மாதத்தைக் காட்டி லும் ரூ.121.50 உயர்த்தி உள்ளது. நடப்பு மாதத்தில் இதன் விலை ரூ.1667.50 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.கடந்த நவம்பர் மாதம் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ.1319.50 ஆகவும், டிசம்பர் மாதம் ரூ.1391 ஆக வும், ஜனவரி மாதம் ரூ.1457. 50 ஆகவும் இருந்தது. கடந்த நான்கு மாதங்களில் வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ரூ. 348 வரை உயர்ந்துள்ளது. இந்த அபரிமிதமான விலை உயர்வால் ஓட்டல், டீக் கடைக்காரர்கள், சாலை யோர டிபன் கடைக்காரர் கள் அதிர்ச்சி அடைந்துள் ளனர்.இதுகுறித்து எண்ணெய் நிறுவன கூட்டமைப்பின் பிரதிநிதி ஒருவர் கூறுகை யில், கடந்த ஜனவரி மாதம் நடந்த டேங்கர் லாரி வேலை நிறுத்தம் மற்றும் சிலிண்டர் களில் நிரப்புவதற்கான எல்பிஜி காஸ் இறக்குமதி யில் ஏற்பட்ட தாமதம் கார ணமாக சந்தையில் வர்த்தக காஸ் சிலிண்டருக்கான தேவை அதிகரித்துள்ளது. அத னால், இதன் விலை கணிச மாக உயர்த்தப்பட்டு உள் ளது என்றார்.

Leave A Reply

%d bloggers like this: