2011-12ம் நிதியாண்டில் பொதுத்துறை நிறு வனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 40 ஆயிரம் கோடி ரூபாயைத் திரட்ட காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட் டணி அரசு முடிவு செய்திருந்தது.
முதலாளித் துவக் கொள்கைகள் அதன் குருபீடமான அமெ ரிக்காவில் உருவாக்கிய நெருக்கடியால் பங்குச் சந்தைகளின் தலைக்கு மேல் வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியப் பங்குச்சந்தையும் இதற்கு விதிவிலக்கல்ல. 40 ஆயிரம் கோடி ரூபாய் இலக்கில் பிப்ரவரி 29 ஆம் தேதி வரையில் 1,145 கோடி ரூபாயை மட்டுமே திரட்டியிருந்தது. பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேசன் பங்கு களை விற்றதன் மூலம் இந்த நிதி திரட்டப்பட் டிருந்தது. வரும் மத்திய நிதிநிலை அறிக்கை யின்போது பெரும் முதலாளிகளுக்கு சலுகை கள் வழங்குவதற்கு நிதியிருப்பை உத்தரவாதம் செய்து கொள்ளவும் அவசரகதியில் எவ்வளவு அள்ளினாலும் குறையாமல் லாபம் தரும் ஓ.என். ஜி.சியின்(எண்ணெய் மற்றும் இயற்கை எரி வாயுக்கழகம்) பங்குகளை சூறையாட முடிவு செய்தனர். 42.80 கோடி பங்குகளை ஒரு பங் குக்கு ரூ.290 என்ற விலைக்கு விற்பதாகவும் அறி வித்தனர்.
இதன்மூலம் 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரும் என்பது அவர்கள் திட்டம்ஆனால் பங்குகள் விற்பனைக்கு வந்த மார்ச் 1 அன்று மந்த நிலை நிலவியதால் 29.22 கோடி பங்குகளுக்குத்தான் பதிவு செய்யப்பட்டது. குறுக்கு வழியில் இறங்கிய மத்திய அரசு, மிகவும் பாதுகாப்பான நிதி நிறுவனங்கள் என்று மக்க ளால் அழைக்கப்படும் எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகிய இரண்டையும் இறக்கிவிட் டது. எஞ்சியுள்ள பங்குகள் அனைத்தையும் வாங்கியாக வேண்டும் என்ற உத்தரவுகள் பறந் தன என்று செய்திகள் வெளியாகியுள்ளன. திரைமறைவில் வேலைகள் நடந்தன. 8 ஆயிரத்து 500 கோடி ரூபாய்தான் திரளும் என்ற நிலையில், எஞ்சியுள்ள பங்குகள் அனைத்தை யும் எல்.ஐ.சி. மற்றும் பாரத ஸ்டேட் வங்கி ஆகி யவை வாங்கியுள்ளன.
எல்.ஐ.சி. மட்டும் 12 கோடி பங்குகளை வாங்கியிருக்கிறது. இதன்மூலம் பங்குச்சந்தைக்கு உயிர் கொடுக்கும் முயற்சியும் நடந்திருக்கிறது. அந்த முயற்சி வெற்றி பெற வில்லை என்றாலும் ஓ.என்.ஜி.சி. பங்குகளை சூதாட்டத்தில் இறக்கியதோடு, மக்களின் பெரும் நம்பிக்கையைப் பெற்றுள்ள இரண்டு பெரும் பொதுத்துறை நிறுவனங்களின் பணத்தையும் அதில் போட்டிருக்கிறார்கள். உலகம் முழுவதும் நடைமுறையில் இருக் கும் சலுகைசார் முதலாளித்துவக் கொள்கை யைத்தான் மறைமுகமாக இங்கு அரங்கேற்றுகி றார்கள். சட்ட ரீதியான சலுகைகள், அரசு நிதி யுதவி மற்றும் சிறப்பு வரிச்சலுகைகள் போன்ற வற்றையே சலுகைசார் முதலாளித்துவக் கொள் கையின் அம்சங்களாகச் சொல்கிறார்கள். பெரும் முதலாளிகளின் கொள்ளைக்கு பங்குச்சந்தை கேந்திரமானதாக இருந்து வருகிறது. அதில் நிலவும் மந்தத்தைப் போக்க கொழிக்கும் பொதுத் துறை நிறுவனங்களைப் பணயம் வைக்கிறார் கள். வந்தால் பெரும் முதலாளிகளுக்கு, போனால் மக்கள் தலையில் என்பதுதான் ஆட்சியாளர் களின் தாரக மந்திரமாக உள்ளது.
இந்தத் தாரக மந்திரங்களுக்கு எதிராக வலுவான முழக்கங் கள் எழுந்து வருகின்றன. நாட்டின் வரலாற்றி லேயே மிகப்பெரிய வேலை நிறுத்தம் என்று சொல்லுமளவுக்கு பிப்ரவரி 28 அன்று அனைத் துப்பகுதியினரும் இணைந்து போராடியிருக்கி றார்கள். ஓ.என்.ஜி.சி. பங்கு விற்பனை போன்ற ஏமாற்று வேலைகள் மக்களின் போராட்டக் குணத்திற்கு உரமிடும் வேலையையே செய்யும். போராட்ட அலைகள் தீவிரமாகும்.

Leave A Reply