கோவை, மார்ச் 2-முழங்கை இறுக்கம் மற்றும் முழங்கை விறைப்பு நோய்க்கு தீர்வு தருவதாக கோவை ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவ மனையின் மருத்துவர் சி. ரெக்ஸ் தெரிவித்தார்.இந்த நோய் பரவலாக உள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் கையை, நீட்டவும், மடக்கவும் முடியாமல் எந்த வேலையையும் செய்ய முடியாமல் முடமாக்கப்பட்டுள்ளனர். பல் துலக்குதல், தலைவாருதல், உடை அணிதல், குளித்தல் போன்ற தனது அன்றாட பணிகளை கூட செய்ய முடியாமல் உள்ளனர்.விபத்து, கிருமிகளால் பாதிப்பு, மற்றும் மூட்டுவாதத்தினால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் தவறான சிகிச்சைகளாலும் இது போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு அதிகம் ஏற்படுகிறன. இதை சரி செய்ய அறுவை சிகிச்சை முயற்சிகள் தோல்வியடைந்துள்ள நிலையில் எங்கள் ரெக்ஸ் ஆர்த்தோ மருத்துவமனை பல ஆராய்ச்சிகளை செய்து புதிய அறுவை சிகிச்சை உத்திகள் மூலம் இந்த பாதிப்பை நிரந்தரமாக குணப்படுத்தி வருகிறோம். இதுவரை 128 பேருக்கு குணப்படுத்தியுள்ளதாகவும், இதற்கு அதிகபட்சம் 40 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறதாகவும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.