புதுதில்லி, மார்ச் 2-
இந்திய அரசின் மகத்தான பொதுத்துறை நிறுவனங் களில் ஒன்றான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தின் (ஓஎன்ஜிசி) பங்கு கள் விற்பனை குறித்த பரபரப் பான தகவல்கள் ஊடகங்க ளில் வந்துகொண்டிருக்கும் நிலையில், இந்நிறுவனத்தின் நிர்வாகமும், அதற்குத் தலை மை வகிக்கும் பெட்ரோலியத் துறை அமைச்சகமும், காங்கி ரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர சும் திட்டமிட்டே விட்டுக் கொடுத்ததன் விளைவாக, அரசுக் கருவூலத்திற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய ரூ.1 லட்சம் கோடியை பன் னாட்டு பகாசுர நிறுவனமான வேதாந்தா ரிசோர்சஸ் நிறுவ னம் சூறையாடிவிட்டது.இதுதொடர்பான அதிர்ச்சிகரமான விபரங்கள், உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஒரு மனுவின் மூலம் வெளி உல கிற்கு தெரியவந்துள்ளது. ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி சூறையாடப்பட்ட 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், இன்னும் எத்தனை லட்சம் கோடி என முழுமையாகக் கணக்கிடப்ப டாத விண்வெளி அலைக்கற் றை ஊழல், மன்மோகன் அரசும் பெட்ரோலியத்துறை யும் ரிலையன்ஸ் நிறுவனத்திற் காக முன்னின்று நடத்திக் கொடுத்த கிருஷ்ணா-கோதா வரி எண்ணெய் வயல்களில் நடந்த வரலாறு காணாத ஊழல் என நீளும் பட்டியலில் மேலும் ஒரு ஊழலாக வேதாந்தா ஊழல் உருவெடுத்துள்ளது.வேதாந்தா ரிசோர்சஸ் எனும் நிறுவனம் லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஒரு பன்னாட்டு சுரங்க நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம், கடந்த ஆண்டின் இறுதியில், மற்றொரு பன் னாட்டு நிறுவனமான கெய்ர்ன் இந்தியா நிறுவனத்திடமிருந்து 40 சதவீதப் பங்குகளை பேரம் பேசி வாங்கியது. இந்த பேரத் திற்கு இந்திய சட்டவிதிகளின் படி, மத்திய அமைச்சரவை யும் பெட்ரோலியத்துறை அமைச்சகமும் ஒப்புதலும் சான்றிதழும் வழங்கின.கெய்ர்ன் இந்தியா என்பது, பிரிட்டனை தலைமையிட மாகக் கொண்ட கெய்ர்ன் எனர்ஜி எனும் பன்னாட்டு எண்ணெய் வர்த்தக நிறுவனத் தின் இந்தியக் கம்பெனி ஆகும். கெய்ர்ன் இந்தியா, இந்திய அர சின் பொதுத்துறை நிறுவன மான ஓஎன்ஜிசியுடன் ஒப்பந் தம் மேற்கொண்டு, இந்தியா வின் பல்வேறு பகுதிகளில் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு தோண்டியெடுத்து சுத்திகரித்து கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது. இந்நிறுவனத்திற்கு இந்தியா வில் 10 முக்கியமான எண் ணெய் தளங்களில் செயல்பட ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள் ளது. அவற்றில் மிக முக்கிய மானது ராஜஸ்தான் எண் ணெய் வயல்கள் ஆகும். ராஜஸ்தான் எண்ணெய் வயல் கள் மட்டுமின்றி, பாலாறு எண்ணெய் வயல்கள், கிரு ஷ்ணா-கோதாவரி எண் ணெய் வயல்கள், கேரளா-கொங்கன் பிரதேசத்தில் உள்ள எண்ணெய் வயல்கள், காம்பே வளைகுடா பகுதியி லுள்ள எண்ணெய் வயல்கள் மற்றும் குஜராத்-சவுராஷ்ட்ரா எண்ணெய் வயல்கள் உள்பட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வளம் கொழிக்கும் வயல்கள் அனைத்தும் கெய்ர்ன் இந்தியா நிறுவனத்தின் மேற் பார்வையிலேயே விடப்பட் டுள்ளன.இந்த ஒப்பந்தத்தின் அடிப் படையில் ஓஎன்ஜிசி நிறுவ னத்திற்கு முறையாக அளிக்க வேண்டிய கட்டணங்கள், வரிகள் உள்ளிட்டவற்றில் கெய்ர்ன் இந்தியா ஒழுங்காக நடந்துகொள்ளவில்லை. எனவே இதுதொடர்பாக பல தாவாக்கள் இரு நிறுவனங் களுக்கும் இடையே இருக் கின்றன. இத்தகைய நிலையில், இந் திய நாட்டிற்குச் சொந்தமான எண்ணெய் வயல்களில் தொழில் நடத்தி லாபம் சம் பாதிக்கும் கெய்ர்ன் இந்தியா வின் 40 சதவீத பங்குகளை, இரும்புத்தாது வளமும், பாக் சைட் தாது வளமும் நிரம்பிய சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் உள் ளிட்ட மாநிலங்கள் அடங் கிய மத்திய இந்தியாவின் பெரும்பகுதியை தனது சுரங் கங்களால் ஆக்கிரமித்திருக் கும் வேதாந்தா நிறுவனத்திற்கு, லண்டனில் அமர்ந்து கொண்டே கெய்ர்ன் இந்தியாவின் தலை மை நிறுவனமான கெய்ர்ன் எனர்ஜி நிர்வாகக் குழு விலைபேசியது; பங்கு களை விற்பனை செய்ய ஒப் பந்தம் மேற்கொண்டது.ஓஎன்ஜிசியுடனான ஒப்பந்தத்தின்படியும், இந்திய சட்டவிதிகளின்படியும், கெய்ர்ன் இந்தியா நிறுவனம் தனது பங்குகளை விற்க விரும்பினால் அது முதலில் ஓஎன்ஜிசியிடம்தான் விற்க வேண்டும்; ஓஎன்ஜிசி அந்த பங்குகளை வாங்க விரும்ப வில்லை என்றால் அரசின் அனுமதியோடு தனது பேரத் தை நடத்தலாம். ஆனால், ஓஎன்ஜிசியுடன் எந்தப்பேச்சு வார்த்தையும் நடத்தாமல், கெய்ர்ன் இந்தியா தனது 40 சதவீதப் பங்குகளை வேதாந் தாவுக்கு விற்றது. இந்தப் பேரத்தின் மொத்த மதிப்பு 8.7 பில்லியன் டாலர் ஆகும். முத லில் 10 சதவீதப்பங்குகளை வேதாந்தா வாங்கிக்கொண் டது. பின்னர் 30 சதவீதப் பங் குகளை வாங்குவதற்காக ஓஎன்ஜிசியிடம் தடையில் லாச் சான்றிதழ் வாங்க வேண் டியிருந்தது. அந்தச்சான்றிதழ் கேட்டபோது, ஓஎன்ஜிசி நிர் வாகம் ஓரிரண்டு நிபந்தனை கள் மட்டும் கூறிவிட்டு சான் றிதழ் வழங்கியது என்பது தான் விந்தையானது. இதற்கு பெட்ரோலியத்துறை அமைச் சகம் முழு ஆதரவு. பெட்ரோ லியத்துறை அமைச்சகத்தின் முடிவை மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது என்பது வெட்கக்கேடானது.உச்சநீதிமன்றத்தில் வழக்குதற்போது இந்தப்பிரச் சனை உச்சநீதிமன்றத்திற்கு வந்துள்ளது. பெங்களூரைச் சேர்ந்த அருண்குமார் அகர் வால் என்பவர், ஓஎன்ஜிசி நிறுவனத்திடம் கேட்காம லேயே கெய்ர்ன் இந்தியா நிறுவனம், வேதாந்தா நிறுவ னத்திற்கு 40 சதவீதப்பங்கு களை விற்றது சட்டவிரோத மானது என்றும், இந்த பேரம் குறித்து மத்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அதிகாரியின் அறிக்கையில் பல்வேறு அம்சங்கள் குறிப் பிடப்பட்டபோதிலும், அரசு மிகுந்த அலட்சியத்துடன் அதற்கு ஒப்புதல் அளித்தது தவறு என்றும் உச்சநீதிமன் றத்தில் தாக்கல் செய்த மனு வில் குறிப்பிட்டுள்ளார். அது மட்டுமின்றி, ஓஎன்ஜிசி நிறு வனத்திடம் விற்காமல், கெய்ர்ன் இந்தியா தனது பங்குகளை வேதாந்தாவுக்கு விற்றதன் மூலமும், இந்த பேரத்தை தடுக்காமல், அரசு பொதுத்துறை நிறுவனத்தின் சட்ட உரிமையை நிலைநாட் டாமல் அரசாங்கமே வேடிக் கை பார்த்ததன் விளைவாக வும், இந்திய அரசின் கருவூ லத்திற்கு ரூ. 1லட்சம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள் ளது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். எனவே இந்தப்பேரத்தை ரத்து செய்ய வேண்டுமென்றும், இது குறித்து முழுமையான சிபிஐ விசாரணைக்கு உத்தர விடவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.இந்த மனு வெள்ளியன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச். எல்.தத்து மற்றும் சி.கே.பிர சாத் ஆகியோரடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தை இந்தக்குறிப் பிட்ட பெஞ்ச் விசாரிக்க முடி யாது என்றும், வேறு பெஞ்ச் சுக்கு மாற்ற வேண்டுமென் றும் கூறினர். வேறு எந்த விளக்கத்தையும் தெரிவிக்காத நீதிபதிகள், இந்த வழக்கு வேறு ஒரு பெஞ்ச் மூலமே விசாரிக்கப்பட முடியும் என்றும் கூறினர்.இந்த வழக்கைத் தொடர்ந் துள்ள அருண்குமார் அகர் வால் என்பவர்தான், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத் திலும் முதல்முறையாக பொது நலன் வழக்கு தொடுத் தவர் என்பது குறிப்பிடத் தக்கது.(பிடிஐ தகவல்களுடன்)

Leave A Reply