வேலூர், மார்ச் 2-
மணல் குவாரி அனுமதி பெற்று தருவதாக ரூ. 1 கோடி மோசடி செய்த வழக் கில், அமைச்சர் செங்கோட் டையனின் முன்னாள் உதவி யாளர் மற்றும் சசிகலா உறவினர் ராவணன் ஆகிய இருவரும் வேலூர் நீதிமன் றத்தில் ஆஜர் படுத்தப்பட் டனர்.வேலூர் மாநகராட்சி முன்னாள் அதிமுக உறுப் பினர் ஜி.ஜி. ரவி. இவர் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை ஒப் பந்ததாரராக உள்ளார். ரவி மணல் குவாரி ஒப்பந்தம் பெற அமைச்சர் செங்கோட் டையனின் முன்னாள் உதவி யாளர் ஆறுமுகத்திடமும், சசிக்கலா உறவினர் ராவண னிடமும் ரூ. 1 கோடி கொடுத் ததாக கூறப்படுகிறது. மணல் குவாரி ஒப்பந்தம் பெற்றுத் தராமல் மேலும் ரூ. 3 கோடி பேட்டதாகவும், பணத்தை திரும்ப கேட்டதற்கு தன்னை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர் என்றும், அவர் களிடமிருந்து பணத்தை பெற்றுத்தர வேண்டும் என் றும் ரவி வேலூர் எஸ்.பி. கயல்விழியிடம் புகார் கொடுத்திருந்தார்.அதன்பேரில் ராவணன் மற்றும் ஆறுமுகம் ஆகி யோர் மீது மோசடி, கொலை மிரட்டல் ஆகிய பிரிவு களில் டிஎஸ்பி ராமேஸ்வரி வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தினார்.இந்த வழக்கு வேலூர் ஜே.எம். 1 நீதிமன்றத்தில் ஆறுமுகம் வியாழனன்றும் (மார்ச் 1), ராவணன் வெள்ளி யன்றும் (மார்ச் 2) ஆஜர் படுத்தப்பட்டனர்.வழக்கை விசாரித்த நீதி பதி தமிழ்செல்வி மார்ச் 16ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்தார்.

Leave A Reply

%d bloggers like this: