தமிழ் திரையுலகில் தன்னுடை இயல்பான நகைச்சுவையான நடிப்பால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் நாகேஷ். கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த சாதனையாளரான நாகேஷ் கடந்த 2009 ம் ஆண்டு காலமானார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அவரது மகள் சவுந்தர்யா இயக்கி வரும் படம் கோச்சடையான். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து இரண்டாம் கட்டமாக இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இப்படத்தில் மறைந்த நடிகர் நாகேஷ் நடிப்பது போன்ற காட்சிகள் கிராபிக்ஸ் தொழில் நுட்பத்தில் இணைக்கப்பட உள்ளதாக சவுந்தர்யா தெரிவித்துள்ளார். இச்செய்தி நடிகர் நாகேஷின் ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply