நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் விஜய் மீண்டும் தனது சொந்த குரலில் பின்னணி பாடலொன்றை பாட உள்ளார். துப்பாக்கி என பெயரிடப்பட்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் நடிகர் விஜய் மற்றும் நடிகை காஜல் அகர்வால் இணைந்து நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்காக இசை அமைத்து வரும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தனது மெட்டில் உருவான ஒரு பாடலுக்கு நடிகர் விஜய் பாடினால் நன்றாக இருக்கும் என கருதி இயக்குநரிடம் விருப்பம் தெரிவித்துள்ளார். இது குறித்து ஏ.ஆர். முருகதாஸ், நடிகர் விஜயை அழைத்து இசையமைப்பாளரின் விருப்பத்தை தெரிவிக்க, உடனடியாக சம்மதம் தெரிவித்து பாடுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளார் நடிகர் விஜய். இப்பாடலுக்கான ஒலிப்பதிவு தற்போது செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் விஜய் முன்னமே தேவா, காதலுக்கு மரியாதை, பகவதி, சச்சின், பத்ரி உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் பின்னணி பாடல்களை பாடி உள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: