நாமக்கல், மார்ச் 2-நாமக்கல் துறையூர் சாலையில் இந்திய ஜனநாயகக் கட்சியின் சார்பில் மின் வெட்டைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.முத்துராஜா தலைமை வகித்தார். இதில் கூடங்குளத்தில் ரூ.13,500 கோடி செலவில் கட்டப்பட்ட அணு மின் நிலையத்தை உடனடியாக திறக்க வேண்டும். சூரிய ஒளி மூலம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அக்கட்சியினரைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: