மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தல்சத்தி, மார்ச் 2-மின்வாரியத்தை கம்பெனியாக மாற்றியதை மீண்டும் பொதுத்துறையாக மாற்றிட வேண்டும் என மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தி உள்ளது.சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சத்தி கோட்ட மாநாடு செவ்வாயன்று நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு துணைத் தலைவர் கே.பாண்டியன் தலைமை தாங்கினார்,இதில் மின்வாரிய தனியார்மயம் மற்றும் அகில இந்திய பொது வேலை நிறுத்தம் குறித்து விளக்கி கோபி மின் திட்ட செயலாளர் எஸ்.ஏ.ராம்தாஸ் உரையாற்றினார். மேலும், கோபி கிளையின் இணைச்செயலாளர் வி.கிருஷ்ணமூர்த்தி, மலைவாழ் மக்கள் சங்க தலைவர் கே.ஆர்.திருத்தணிகாசலம் ஆகியோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். இம்மாநாட்டில் மின்வாரியத்தில் உள்ள காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்வதை கைவிட வேண்டும். மின்சாரம் தடையில்லாமல் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இம்மாநாட்டில் சங்கத்தின் சத்தி கோட்டத்தின் தலைவராக பி.ஆர்.முத்துசாமி, கோட்ட செயலாளராக கே.பாண்டியன் மற்றும் துணை நிர்வாகிகளாக டி.பர்குணசாமி, எம்.ஏ.ரப்தின், ஏ.அப்துல் ரஹீம், பி.எஸ்.துரைசாமி உள்ளிட்டடோர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.