மன்னார்குடி, மார்ச் 2-
மன்னார்குடி மின்வாரிய கோட்டப்பொறியாளர் அலுவலகம் முன்பாக விவ சாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. மத்திய மின் தொகுப்பி லிருந்து மன்மோகன் அரசு தரவேண்டிய 2800 மெகா வாட் மின்சாரத்தை உடனே அளிக்க வேண்டும், விவ சாயத்திற்கு குறைந்தபட்சம் 10 மணிநேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண் டும்; நீரை தனியார்மய மாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிடவேண்டும் என்பன போன்ற கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற் றது.விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய தலைவர் கே.ஜி. கிருஷ்ணன் தலைமை ஏற் றார். மாவட்டக்குழு உறுப் பினர் ஜி.ரகுபதி முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் ஒன்றி யச் செயலாளர் ஏ.தங்க வேலு, நகரச் செயலாளர் கே. நீலமேகம், விதொச மாவட்டத் தலைவர் எம். திருஞானம், விவசாயிகள் சங்க நகரத் தலைவர் பி. ராமு, நகரச் செயலாளர் பி. சந்திரகாசன், நகரக்குழு உறுப்பினர் தங்க.ஜெகதீசன் ஆகியோர் மின்வெட்டை கண்டித்து உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து மாவட்டக்குழு உறுப்பினர் டி.பன்னீர் செல் வம் சிறப்புரையாற்றினார். விவசாயிகள் மற்றும் விவ சாயத் தொழிலாளர் சங் கத்தின் உறுப்பினர்கள் பெருந் திரளாய் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: