சென்னை, மார்ச் 2-
மாலத்தீவு கரையோர காவற்படையினரால் கைது செய் யப்பட்ட 11 மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு தமிழகம் திரும்ப உள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:கன்னியாகுமரி மாவட்டத்தினைச் சேர்ந்த 11 மீனவர் கள், அம்மாவட்டத்திலுள்ள இரவிப்புத்தன்துறை மீனவ கிராமத்திலிருந்து மீன்பிடி விசைப்படகில் 23.2.2012 அன்று அரபிக்கடல் பகுதியில் மீன்பிடிக்கச் சென்றனர். படகில் ஏற்பட்ட சிறு பழுதினால், படகு கடல் நீரோட் டம் காரணமாக மாலத்தீவு கடற்பகுதிக்கு திசை மாறிச் சென்றது. மாலத்தீவு கடற்பகுதியில் இப்படகு காணப் பட்டதால், மாலத்தீவு கரையோரக் காவற்படையினர், மேற்கண்ட படகினையும், அதிலிருந்த 11 மீனவர்களையும் கைது செய்ததாக தகவல்கள் பெறப்பட்டன.மேற்கண்ட தகவல் கிடைக்கப்பெற்றவுடன், தமிழக முதலமைச்சர் உத்தரவின்பேரில், தமிழக அரசு வெளி யுறவுத்துறை அதிகாரிகளை உடனடியாக தொடர்பு கொண்டு, தங்களின் வாழ்வாதாரத்திற்கென மீன்பிடிப்பில் ஈடுபட்டி ருந்த 11 மீனவர்களையும், அவர்களது படகினையும் உடன டியாக விடுவித்திட ஆவன செய்திட, மாலத்தீவின் இந்திய தூதரக அதிகாரியைக் கேட்டுக் கொள்ள விரைவு நட வடிக்கை எடுத்தது.தமிழக அரசு மேற்கண்ட இம்முயற்சியின் காரணமாக, மீனவர்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாமல், அவர்கள் மாலத்தீவுக்கு கொண்டு செல்லப்படாமல் வழி யில் உள்ள குல்த்துப்யூஷி என்னும் இடத்தில் வெள்ளி யன்று (மார்ச் 2) விடுவிக்கப்படுகின்றனர். விடுவிக்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் இரண்டு, மூன்று நாட்களில் தமி ழகம் திரும்புவார்கள் என்று தமிழக அரசு வெளியிட்ட செய் திக்குறிப்பு தெரிவிக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: