மாலே, மார்ச் 2-மாலத்தீவில் இயல்புநிலை திரும்புவதற் காக உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சிக் குழுவில் இருந்து அந்நாட்டின் 2-வது பெரிய கட்சியான டி.ஆர்.பி. விலகுவதாக அறிவித்துள்ளது.மாலத்தீவு முன்னாள் அதிபர் நஷீத்தின் சகோதரர் உட்பட அவரது ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தில் வியாழனன்று ரக ளையில் ஈடுபட்டதற்கு எதிர்ப்புத் தெரி வித்து இம்முடிவை அக்கட்சி மேற் கொண்டுள்ளது.நாடாளுமன்றத்தை நடத்துவதற்கு நஷீத்தின் கட்சி அனுமதித்தால் மட்டுமே அனைத்துக் கட்சிக் குழுவில் தமது கட்சி இடம்பெறும் என்று டி.ஆர்.பி.யின் துணைத் தலைவரும் தற்போதைய அதி பர் வகீத் அரசில் அமைச்சராகவும் உள்ள அகமது முகமது தெரிவித்துள்ளார்.புதிய அதிபரான வகீத் பதவி விலக வேண்டும் என்பதும், மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்பதும் நஷீத் கட்சி யின் கோரிக்கை ஆகும்.

Leave A Reply