புதுதில்லி, மார்ச் 2-
மாற்றுத்திறனாளி உரி மை ஆர்வலர் அஞ்சலிக்கு விமான நிலையத்தில் மீண் டும் கொடூரச் சம்பவம் நிகழ்ந்தது. கடந்த வாரம் ராய்ப்பூர் விமான நிலையத் தில், அவர் விமானத்தை விட்டு இறங்குவதற்கு பக்க வாட்டு நாற்காலி இல்லாமல் பொருட்களை இறக்கி வைப்பதை போல இறக்கி வைக்கப்பட்டார். அதேப் போன்ற கொடூர நிகழ்வு தலைநகர் தில்லியின் டி-3 விமான நிலையத்தில் அஞ்சலிக்கு ஏற்பட்டது. ஏர் இந்தியா நிறுவன ஊழிய ரின் உதவி இல்லாமல் பொருட்களை தள்ளிவிடும் டிராலியில் வைத்து உருட்டி விடப்பட்டார்.
வியாழக்கிழ மையன்று ஏர் இந்தியா விமானம் மூலம் மும்பை யில் இருந்து தில்லி வந்தேன். அப்போது பொருட்களை தள்ளிவிடும் டிராலியில் நான் வைக்கப்பட்டு இறக்கி விடப்பட்டேன் என்றார்.விமானம் தரை இறங் கும் போது, பக்கவாட்டு நாற்காலியின் மூலம் இறங்க ஏர் இந்தியா ஊழியர் குழுவிடம் வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், தரை இறங்குவதற்கு பக்கவாட்டு நாற்காலி இல்லை என அவர் தெரிவித்தார்.20 நிமிடம் நான் காத்து இருந்தேன். கடைசியாக என்னை விமானத்தில் இருந்து, இறக்குவதற்கு பொருட்களை எடுத்துச் செல்லும் டிராலி வந்தது. பக்கவாட்டு ஆதரவு பெறு வதற்கு கைகளால் பிடித்துக் கொள்ள எதுவும் இல்லை என அஞ்சலி வேதனையு டன் தெரிவித்தார். குறுக லான இருக்கையில் என் னால், சரிசெய்து உட்கார முடியாமல் பலமுறை தடு மாறினேன்.
மிகவும் மனப் புழுக்கமும், அவமானமும் அடைந்தேன். 12-13 ஊழி யர்கள் என்னை பரிதாப மாக பார்த்தனர் என்றும் அஞ்சலி கூறினார்.இந்த அனுபவ நிகழ்வு மரியாதைக்கு உரியது அல்ல. பாதுகாப்பற்றது, துரதிர்ஷ்டமானது என அவர் கூறினார்.விமான நிலையத்தில் அனைத்து தரைத் தள ஊழியர்களுக்கும் விமானி மற்றும் இதரக் குழுவின ருக்கும் மாற்றுத் திறனாளி களை இடம் மாற்றுவதற்கு பயிற்சித் தரப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

Leave A Reply

%d bloggers like this: