உதகை, மார்ச் 2- நீலகிரி மாவட்டம் உதகையில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 5 பேர் காயமடைந்தனர்.இம்மாணவர்களிடையே விடுதியில் தங்குவது தொடர்பாக ஏற்கனவே பிரச்சனை இருந்து வந்தது. இந்நிலையில் இரு தரப்பைச் சேர்ந்த மாணவர்களும் வெள்ளியன்று ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதையடுத்து கல்லூரி வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.