முசிறி, மார்ச் 2-
முசிறியை அடுத்த கோமங்கலம் ஊராட்சியில் சிறப்பு மனு நீதி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. முகாமிற்கு முசிறி கோட்டாட்சியர் ஜெயசீலா தலைமை வகித்தார். ஊராட்சி தலைவர் தங்கவேல், சிறப்பு திட்ட தனித்துணை வட்டாட்சியர் பாலசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முசிறி வட்டாட்சியர் மனோகரன் அனைவரையும் வரவேற்றார். முகாமில் பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களுக்காக பொதுமக்களிடம் இருந்து 92 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 45 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 42 மனுக்கள் மேல் விசாரணைக்கு பரிந் துரை செய்யப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் பால கிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் வருவாய் ஆய்வாளர் புஷ்பராணி நன்றி கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: