———————————————–
தண்டம் கட்டுகிறது சஹாரா
———————————————–
தனியார் நிறுவனமான சஹாரா லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் மீது ரூ.12 லட்சம் தண்டத் தொகையை இன் சூரன்ஸ் வளர்ச்சி மற்றும் கட்டுப்பாட்டு ஆணையம் விதித்திருக்கிறது. ஒன்று இரண்டல்ல மூன்று விதிகளை மீறி யதற்காக இத்தண்டனை. முக்கியமாக இறப்பு உரிமங்களை வழங்குவதில் பாலிசிதாரர்களை இழுத் தடிப்பது. நிலுவையில் உள்ள 231 இறப்பு உரிமங்களில் 41 உரிமங்கள் ஆறு மாத காலத்திற்கும் மேலானவை ஆகும்.
இவற்றில் அந்த ஆவணம் இல்லை, இது இல்லை என்று சஹாரா சொல்கிற சாக்குப் போக்குகளை கணக் கிற் கொண்டாலும் 20 உரிமங்கள் தாம தம் ஆவதற்கு எந்தக் காரணமும் இல்லை. இன்சூரன்ஸ் தொழிலின் முதன்மைக் கடமையே இறப்பு உரிமங்கள் வழங்கு வதுதான்.அதிலேயே இந்த லட்சணம். இரண்டாவது, லைசென்ஸ் இல்லாத முகமைகள் வாயிலாக வணிகம் பெற் றிருக்கிறார்கள். டம்மி குறியீடுகளை அந்த நிறுவனங்களுக்குப் போட்டு கமி சனும் கொடுத்திருக்கிறார் கள். இது தவிர நிறுவன முகமைகள் சம்பந்தமான விதிகளையும் மீறியிருக்கிறார்கள்.

Leave A Reply