கோவை, மார்ச்-2-சிஐடியு கோவை மாவட்ட தையற்கலைஞர்கள் சங்க பெயர் பலகை மற்றும் தகவல் பலகைகள் சமூக விரோதிகளால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.கோவை மாவட்ட தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட தலைமை அலுவலகம் கோத்தாரி மில் சந்தில் உள்ள முத்து நினைவகத்தில் செயல்படுகிறது. இங்கு சங்கத்தின் பெயர் பலகை மற்றும் தகவல் பலகை வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வியாழனன்று இரவு அடையாளம் தெரியாத சமூக விரோதிகள் இரண்டு பலகைகளையும் உடைத்து கிழித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்ட குற்றவாளிகளை கண்டுபிடித்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தையல் கலைஞர்கள் சங்க மாவட்ட பொதுச் செயலாளர் ஆர்.வேலுச்சாமி, மார்க்சிஸ்ட் கட்சியின் சிங்கை நகர செயலாளர் கே. மனோகரன் ஆகியோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். பின்னர் காவல் துறை அதிகாரிகள் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு வழக்குப் பதிவு செய்தனர்.

Leave A Reply

%d bloggers like this: