சென்னை, மார்ச், 2 –
தமிழ்பொழுதுபோக்கு அலைவரிசையான பெப் பர்ஸ் டிவி மார்ச் 8 மகளிர் தினத்தன்று சிறப்பு நிகழ்ச் சிகளை நடத்தவுள்ளது.மாலை 5.30 மணிமுதல் 9மணி வரை ஒளிபரப்பப் படும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்மணிகள் சாதனை சிகரத்தை தொட்ட பதிவுகளை இதில் நேயர்கள் பார்த்து மகிழலாம். சாதனை பெண்கள், பவர் உமன், இனிமே நாங்க தான், அன்பென்றாலே அம்மா, சின்னபசங்க நாங்க என பல நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. இந்த நிகழ்ச்சிகளில் பெண் தொழில்முனைவோர் சக்தி மசாலா சாந்தி துரை சாமி, சிவகாமி ஐஏஎஸ், நர்த்தகி நட்ராஜ், பர்வீன் சுல்தானா, வழக்கறிஞர் அருள்மொழி, உளவியல் நிபுணர் ஷாலினி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.செஃப் தாமு மற்றும் செஃப் சண்முகம் ஆகியோர் இரவு 8.30 மணி முதல் 9 மணி வரை உணவுக்கு சுவையூட்டும் உயர் தகவல்களை செய்முறையோடு நடத்தவுள்ளனர்.

Leave A Reply