தேசிய சதுரங்க அணி போட்டி முடிவுகள் திசை மாறக்கூடும். கிராண்ட் மாஸ்டர்கள் மட்டும் ஆடும் பெட்ரோலியம் அணியும் முன்னிலை மகளிர் வீராங்கனைகள் ஆடும் ஏர் இந்தியா அணியும் அதிர்ச்சி தோல்வி அடைந்துள்ளன. ஐந்து சுழல் ஆட்டங்களை வென்று பத்து புள்ளிகளுடன் முன்னிலையில் இருந்த பெட்
ரோலியம் அணி 1.5-2.5 என்ற புள்ளிகளில் ரயில்வே ‘ஏ’ அணியிடம் தோற்றது. இந்த வெற்றியின் மூலம் ரயில்வே ‘ஏ’ அணி 11 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. பெட்ரோலியம் 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.கிராண்ட் மாஸ்டர்கள் அபிஜித் குண்டேயும் பி.அதிபனும் சர்வதேச மாஸ்டர்களிடம் தோற்றனர். கிராண்ட் மாஸ்டர் எஸ்.அருண் பிரசாத் சமன் செய்து கொண்டார். கிராண்ட் மாஸ்டர் கே.சசிகிரன் மட்டுமே வெற்றி பெற்றார்.மகளிர் போட்டியில் பெட்ரோலியம் மகளிர் அணி வெற்றி வலம் வந்த ஏர் இந்தியா அணியைத் தோற்கடித்தது.
பெட்ரோலியம் அணி 2.5-1.5 என்ற புள்ளிகளில் ஏர் இந்தியா அணியை வீழ்த்தியது. மகளிர் பிரிவில் பெட்ரோலியம் ஏழு புள்ளிகளும், ஏர் இந்தியா, ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா, செஸ் குருகுலம் ஆகிய அணிகள் 6 புள்ளிகளும் வைத்துள்ளன.

Leave A Reply