பெங்களூர், மார்ச் 2-
சுரங்க ஊழல் வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் வெள்ளியன்று ஆஜரான கர்நாடக பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி குறித்து செய்தி சேக ரிக்கச் சென்ற பத்திரிகை யாளர்களையும் பாதுகாப் புக்கு நின்றிருந்த போலீசா ரையும் வழக்கறிஞர்கள் கண் மூடித்தனமாக தாக்கினர்.இதில் படுகாயமடைந்த போலீஸ் ஒருவர் சிகிச்சை பலனின்றி பலியானார். மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளார். மொத் தத்தில் 11 போலீசாரும் ஏரா ளமான பத்திரிகையாளர் களும் படுகாயமடைந்தனர்.கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டிக்கு எதிரான சுரங்க ஊழல் வழக்கு பெங்களூர் நீதிமன்றத்தில் நடந்து வரு கிறது. இந்த வழக்கில் அவர் வெள்ளியன்று நீதிமன்றத் தில் ஆஜரானார். இதற்காக ஹைதராபாத் சிறையிலி ருந்து அவர் பெங்களூர் கொண்டு வரப்பட்டார்.இது குறித்து செய்தி சேகரிக்க நீதிமன்ற வளாகத் தில் பத்திரிகையாளர்கள் கூடினர். இதைப் பார்த்த ரெட்டி ஆதரவு வழக்கறி ஞர்கள், நீதிமன்ற செயல் பாடுகளை எல்லாம் நேரில் பதிவு செய்து செய்தி வெளி யிடக் கூடாது என்று கூறி பத்திரிகையாளர்களை விரட்டினர்.அதையும் தாண்டி அங் கிருந்த பத்திரிகையாளர் களை வழக்கறிஞர்கள் கல் உள்பட கைக்கு கிடைத் ததை வைத்து தாக்கினர். மேலும் டிவி சேனல்கள் வைத்திருந்த கேமராக்க ளைப் பறித்து கீழே போட்டு உடைத்தனர். வழக்கறிஞர் கள் தாக்கியதில் கன்னட டிவி சேனல் ஒன்றின் கேம ராமேனின் மண்டை உடைந்து ரத்தம் கொட் டியது. மேலும் பல பத்திரி கையாளர்கள் தாக்கப்பட்டு காயமடைந்தனர். இதில் பெண் பத்திரிகையாளர் களும் அடக்கம். நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக் கப்பட்டிருந்த பத்திரிகை யாளர்கள் மற்றும் போலீ சாரின் வாகனங்களை வழக் கறிஞர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.அப்போது பிரச்சனை யைத் தீர்க்க வந்த போலீசார் மீதும் அவர்கள் கற்கள், நாற்காலிகளை வீசினர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக் குண்டுகள் வீசியும் வழக்கறிஞர்களை கலைந்து போகச் செய்தனர். இந்த தாக்குதலில் இணைக்கமி ஷனர் ரமேஷ் உள்பட 17 பேர் காயம் அடைந்தார். காயமடைந்தவர்கள் சிகிச் சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க் கப்பட்டனர். அதில் கே. ஆர்.புரம் கான்ஸ்டபிள் மகாதேவப்பா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். மேலும் ஒரு போலீஸ்காரர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.இந்த சம்பவத்தால் அப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் குறித்து விசாரித்து உரிய நடவடிக் கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சதா னந்த கௌடா தெரிவித் துள்ளார். பத்திரிகையாளர்களை வழக்கறிஞர்கள் ஓட, ஓட விரட்டியடித்து காயப்படுத் திய சம்பவத்திற்கு இந்திய பிரஸ் கவுன்சில் தலைவர் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் பத்திரிகையாளர்களை தாக்கிய வழக்கறிஞர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave A Reply