ஜலந்தரில் நடைபெற்ற உலகத்தொடர் ஹாக்கி சுழல் போட்டியில் ஷேர்-இ-பஞ்சாப் அணி 5-2 என்ற கோல்களில் சென்னை சீட்டாசைத் தோற்கடித்தது.சுர்ஜித் சிங் ஹாக்கி மைதானத்தில் நடந்த போட்டியில் ஜலந்தரின் வெற்றி, ஸ்கோர் கூறுவது போல் எளிதாக இல்லை.
மன்தீப் அன்டில் (7ம் நிமிடம்) ஹர்ப்ரீத் நக்ரா (34) பிரப்ஜோத் சிங் (49,70) ககன் அஜித் சிங் (57) ஆகியோர் பஞ்சாப் அணிக்காக கோல் அடித்தனர்.சென்னை அணிக்காக பாகிஸ்தான், ஆட்டக்காரர் இம்ரான் வசீர் பெனால்டி கார்னர்களில் 24 மற்றும் 63ம் நிமிடங்களில் கோல் அடித்தார்.ஏழாம் நிமிடத்தில் மன்தீப் அன்டில் கோல் அடித்தார்.
அதற்குப்பின் சென்னை அணி சமன் செய்ய கடுமையாகப் போராடியது. பஞ்சாப் அணியின் அரை வட்டத்தில் ஐந்து வீரர்கள் முகாமிட்ட போதும் அதனால் கோல் போட முடியவில்லை.34ம் நிமிடத்தில் தீபக் தாக்குர் அரை வட்டத்துக்குள் தடுக்கப்பட்டார். அதனால் கிடைத்த பெனால்டியை ஹர்ப்ரீத் நக்ரா கோலாக மாற்றினார். இரண்டாம் பாதியில் பஞ்சாப் அணி மேலும் மூன்று கோல்களைப் போட்டது.மும்பையில் நடந்த போட்டியில் புனே ஸ்ட்ரைக்கர்ஸ் அணி 7-5 என்ற கோல்களில் மும்பை மெரைன்ஸ் அணியை வென்றது.

Leave a Reply

You must be logged in to post a comment.