அம்பத்தூர், மார்ச், 2 –
ஆவடி அருகேயுள்ள போர் ஊர்தி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி (சிவி.ஆர். டி.இ) நிறுவனத்தில் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி யைச் சேர்ந்த பங்காரு மகன் ஹாரீஷ் (27), விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (28) இரு வரும் பீரங்கி டாங்கி ஓட்டு நராக பணி புரிந்து வருகி றார்கள். கேரள மாநிலத் தைச் சேர்ந்த பிரேம்சந்த் (35) அதிகாரியாக பணி புரிந்து வருகிறார். இங்கே பணிபுரிபவர்கள் மதத்திற் கொரு முறை பயிற்சியாக ராணுவ டாங்கியை ஓட் டிப் பார்ப்பது வழக்கமாம்.அதேபோல் வெள்ளிக் கிழமை காலை செந்தில் குமார் வாகனத்தை ஓட்ட ஹாரீஷ் மற்றும் அதிகாரி பிரேம்சந்த் இருவரும் வாக னத்தில் அமர்ந்து சென்று உள்ளனர். அப்போது வாக னம் எதிர்பாராதவிதமாக அங்கிருந்த ஷெட்டில் மோதுகிறது. இதில் ஷெட் டின் கூறை மற்றும் ஷட் டர் சரிந்து வாகனத்தில் அமர்ந்திருந்த ஹாரீஷ் மீது விழுந்ததில் ஹாரீஷ் சம் பவ இடத்திலேயே பலியா னார். அருகில் அமர்ந்தி ருந்த பிரேம்சந்துக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளதால் சென்னை ராணுவ மருத்தவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். அதேபோல் வாகனத்தை ஓட்டிய செந் தில்குமாருக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. செந்தில்குமார் ஆவடி ராணுவ மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள் ளார்.இதுகுறித்து ஆவடி டேங்க் பேக்டரி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின் றனர்.

Leave A Reply

%d bloggers like this: