நாகப்பட்டினம், மார்ச் 2-
கடந்த பிப்ரவரி 12-ம் தேதி யன்று இரவு நாகை அவுரித் திடலில் செய்தி மக்கள் தொடர் புத் துறையின் சார்பில் நாகை மாவட்ட பல்துறை பணி விளக்க முகாமும் அரசுப் பொருட்காட்சியும் துவங்கின. நாளடைவில் இந்த முகா மானது பல்வேறு கண்காட்சி அரங்கங்கள்,பொருட்காட்சிகள், கடைகள், சிறு ராட்டினங்கள், ராட்சச ராட்டினம், சிறுவர்க் கான விளையாட்டு ரயில், பல் வேறு பொருட்கள் உள்ள அலங்கார விற்பனை நிலை யங்கள், சிற்றுண்டி நிலையங் கள் என்று பெருகி மிகப்பெரிய திருவிழா பொருட்காட்சியாக மாறிப்போனது. இவற்றுடன் அரசின் சாதனைகளை விளக் கக்கூடிய, பல்வேறு துறை களின் சார்பில் பணிவிளக்க முகாம்களும் அமைந்துள்ளன. தினமும் மக்கள் வரிசையில் நின்று நுழைவுச் சீட்டு வாங் கிக்கொண்டு, இந்தப் பொருட் காட்சிக்கு வருகின்றனர். ஒவ் வொரு அரங்கத்திற்கும் தனித் தனி நுழைவுக் கட்டணம் உண்டு. இவையல்லாமல் பொருட்காட்சி நடைபெறும் அவுரித்திடலில் அமைந் துள்ள நிரந்தர மேடையில், தினமும் இரவில் நாடகங்கள், கலை நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள் நடைபெறுகின் றன. ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் கூட்டம் மிக நெரி சலாக உள்ளது. இங்கு அமைந்துள்ள பல்வேறு கடைகளில் பல விதமான பொருட்களை குறைந்த விலைக்கு மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: