மதுரை, மார்ச் 2-
வீட்டுக்குள் புகுந்த 2 கொள்ளையர்கள் கத்தி யைக் காட்டி பெண்ணி டம் இருந்த 20 பவுன்நகை யைப் பறித்துச் சென்றனர்.மதுரை சுந்தரராஜன் பட்டியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவரது மனைவி ரேகா(32). கார்த் திகேயன் துபாயில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் ரேகா வீட்டில் இருந்த போது இரு மர்ம நபர்கள் திடீரென உள்ளே புகுந்தனர். அவர்கள் கத்தி யைக் காட்டி ரேகாவிட மிருந்த 20 பவுன் நகையைப் பறித்துச் சென்றனர்.இது குறித்து அப்பன் திருப்பதி காவல்நிலையத் தில் புகார் செய்யப்பட் டது. வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் கொள் ளையர்களைத் தேடிவரு கின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: