நகராஹோல், மார்ச் 2-
இந்தியாவின் புகழ்பெற்ற நகராஹோல் தேசியப் பூங்காவின் மையப்பகுதி தீயில் சேதமடைந்தது. மூங்கில் காடுகளால் சூழப்பட்ட இந்த சதுப்பு நில நங்காப் பகுதியில் ஏற்பட்ட தீயால் வந்த புகை அங்கு உள்ள புலிகள் மற்றும் யானைகள் வாழ்விடத்தில் நெருக்கடியை ஏற்படுத்தியது.
சேதமடைந்த பகுதியில் இருந்து வந்த தீ ஜூவாலையை அணைக்க தற்காலிக ஊழியர்கள் மற்றும் உள்ளூர் பழங்குடியின மக்கள்உதவினர்.சதுப்பு நிலப் பகுதிக்கு வனத்துறை அமைச்சர் சி.பி. யோகேஷ்வர், வனத்துறை அதிகாரிகள், பத்திரிகையாளர் கள் சென்று பார்வையிட்டனர்.தீயால் சேதமடைந்த பகுதிகளில் யானைகள், குட்டிகளுடன் உணவுக்காக அலைந்தன.
நகராஹோல் தேசியப் பூங்காவில் 600-700 எக்டேர் நிலப்பரப்பு தீயில் சேதமடைந்துள்ளது.தீ ஏற்பட சதிகாரர்கள் காரணமா என்பதை கூறத் தயக்கம் காட்டிய அதிகாரிகள், தீயை அணைக்க பழங்குடியின மக்கள் உதவியதை பாராட்டினர். தீ பரவ இயற்கை காரணம் ஏதும் இல்லை. சதியாளர்கள் தீ வைத்து உள்ளது திட்டவட்டமாக தெரியவந்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் 2-3 நாளில் தீ குறித்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்கிறார்கள்.

Leave A Reply

%d bloggers like this: