தூத்துக்குடி, மார்ச் 2-
எட்டையபுரம் அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அழகர்சாமி செட்டியார் (55). இவர் அப்பகுதியில் தனக்கு சொந்தமான 3ஏக் கர் 15 சென்ட் நிலத்தில் கரும்பு சாகுபடி செய்தி ருந்தார். இவரது நிலத்திற்கு அருகில் அவரது தங்கை ஆவுடையம்மாள் மக்காச் சோளம் பயிரிட்டிருந்தார். சோளம் விளைந்து அறுவடை செய்த பின்னர் அதிலுள்ள சருகுகள் அவ ரது நிலத்தில் கிடந்துள் ளது. அதற்கு மர்ம ஆசாமி கள் சிலர் தீவைத்துள்ள னர். இதில் மளமளவென பற்றி எரிந்த தீ அருகிலி ருந்த கரும்பு தோட்டத்திற் கும் பரவியது.இதுகுறித்து விளாத்தி குளம் தீயணைப்பு நிலை யத்திற்கு புகார் தெரிவிக் கப்பட்டது. இருப்பினும், இந்த தீவிபத்தில் பயிரிடப்பட்ட கரும்புகள் முழுமையாக எரிந்து சாம்பலாகின. இதன் மதிப்பு ரூ.6லட்சம் ஆகும். இந்த சம்பவம் குறித்து மாசார்பட்டி காவல் நிலையத்தில் அழ கர்சாமி புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து தோட்டத்துக்கு தீவைத்த மர்ம ஆசாமி களை தேடி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: