அரவிந்தன் என்பவர் இயக்கி நடிக்கும் காதல் பிசாசே என்ற திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள ஃபோர் பிரேம்ஸ் திரையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில் பிரபல இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் கலந்து கொண்டு திரைப்படம் வெற்றிபெற வாழ்த்தினார்.பின்னர் அவர் பேசுகையில், திரைப்படங்களின் உரிமையை தொலைக்காட்சிக்கு வழங்கப்படும் போது, ஏல முறையை பின்பற்ற வேண்டும். இம்முறையின் மூலம் தயாரிப்பாளர்களுக்கு ஓரளவிற்கேனும் இலாபம் அமையும். இதற்கான ஏலம் பிலிம் சேம்பர் அல்லது தயாரிப்பாளர் சங்கத்தில் நடத்தப்பட வேண்டும். மேலும் தமிழில் பெயர் வைக்கும் தமிழ்ப்படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கப்படும் என அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வெளியாகி நான்கு வருடங்கள் கடந்துவிட்டது. இதுவரை நானூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் தமிழில் பெயர் வைக்கப்பட்டு வெளிவந்துள்ளன. ஆனால் இத்திரைப்படங்களுக்கு எத்தகைய வரிவிலக்கும் இதுவரை அளிக்கப்படவில்லை என தெரிவித்தார்.இயக்குநர் ஆர்.வி. உதயகுமாரின் இப்பேச்சு திரையுலகில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: