அம்பத்தூர், மார்ச், 2 –
ஆவடி காவல் துறையி னர் ஆவடி ரவுண்டான அருகில் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப் போது இருசக்கர வாகனத் தில் வேகமாக வந்த 3 பேரை பிடித்து விசாரித்த னர்.விசாரணையில் யானை கவுனி பள்ளம் 5வது தெருவைச் சேர்ந்த அண்ணா துரை மகன் சோனி என்ற சோனிராஜ் (29), சூளை சைடாம்ஸ் சாலையைச் சேர்ந்த சண்முகம் மகன் கிருஷ்ண மூர்த்தி (24), மூர் மார்க்கெட் கண்ணப்பர் திடலைச் சேர்ந்த ஏழுமலை மகன் வெங்கடேசன் (46) என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் அம்பத் தூர், ஆவடி, திருமங்களம் ஆகிய பகுதிகளில் செயின் பறிப்பு, வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித் தது ஆகியவற்றை ஒப்புக் கொண்டனர். இவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட வழக்கு கள் நிலுவையில் உள்ளன.இவர்களிடமிருந்து 64 சவரன் நகை, ரூ.80 ஆயிரம் பணம் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.தொடர் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது

Leave A Reply