இலங்கையின் வட மாகாணங்களில் நடந்து முடிந்த உள்நாட்டுப் போருக்கு முன்பும், முடிந்த பிறகும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுக்கான தீர்வு காண வேண்டியது மிகவும் அவசியமானது என்றே உறுதி செய்யப்பட்டது. அதனால் தான் உள்நாட்டுப்போர் குறித்து இலங்கை நாடாளுமன்ற தெரிவுக்குழுவோடு விவா தித்து, இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஷே, ஐ.நா. பொதுச்செயலாளர் பான்கிமூன் ஆகியோர் இணைந்து விடுத்த கூட் டறிக்கையானது தமிழர்களுக்கு அதி காரப் பகிர்வுக்காக சகலத் தரப்பினருடன் பரந்த அளவில் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும் என கூறியது. அதன் பிறகு சுமார் இரண்டரை வருட காலம் கடந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா 2012 ஜனவரி மாதம் இலங்கை சென்ற போது “இலங்கை அர சமைப்புச் சட்டம் 13ல் திருத்தம் செய்து” தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வுக்கான தீர்வு காணப்படும் என இலங்கை அரசு அறிவித்தது.
இலங்கை ஜனாதிபதி ராஜ பக்ஷே ஒருபடி மேலே சென்று, அரச மைப்புச் சட்டம் 13வது திருத்தத்திற்கும் மேலே அதிகாரம் வழங்குவோம் என அறி வித்தார். ஆனால் இலங்கை ஆட்சியா ளர்களின் கடந்த கால, நிகழ்கால நிலை பாடுகளை கவனத்தில் கொண்டு பார்க் கும் போது, பெரும் சந்தேகம் எழுவது இயல்புதான் என்றாகிவிட்டது. காலம் தாழ்த்த முடியாதகட்டாயச் சூழ்நிலைதமிழர்களுக்கான அதிகாரப்பரவல் தீர்வு தள்ளிப் போட முடியாது. காரணம், இன்றும் உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட போராளிகள் என்றும், போராளிகளுக்கு உதவியவர்கள் என்றும், தனிநாடு பிரி வினை கருத்துடையவர்கள் என்றும் கருதி கம்பி முள்வேலி முகாமில் ஆயிரக் கணக்கானோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அவரவர் வாழ் விடங்களுக்கு சென்று சுதந்திரமாக வாழ தீர்வு காண வேண்டும். கம்பி முள்வேலி முகாமில் இருக்கும் தமிழர்கள் மட்டுமல்ல, இலங்கை வட மாகாணத்தில் உள்ள மொத்த தமிழ் மக் களும் ராணுவத்தின் தரைப்படை, கடற் படை, விமானப்படையினரின் முழுக் கட் டுப்பாட்டில்தான் இப்பவும் உள்ளனர். இப்படியே சர்வ ராணுவக் கட்டுப்பாட் டில் வாழ்நாட்களை கழிக்க முடியாது.
வட மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், கிளி நொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன் னார் ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள திரிகோணமலை, மட்டக் களப்பு, ஆகிய 7 மாவட்டங்களி லும் ராணுவ ஆட்சிதான் நடைபெறு கிறது. மிக விரைவில் ராணுவம், மாகாண நிர்வாகத்திடமும், மாகாண காவல் துறையிடமும் அதிகாரத்தை ஒப்ப டைக்க வேண்டியது அவசியம். உதாரணமாக, கண்டி- யாழ்ப்பாணம் ஹ-9 தேசிய நெடுஞ்சாலையில் போகும் போது வவுனியா நகரத்தை தாண்டி சுமார் 25 கி.மீ சென்றால் “புளியங்குளத்தில்” இலங்கை ராணுவத்தின் 57வது படைப் பிரிவு (க்ஷசபையனந) மிகப்பெரிய சோதனைச் சாவடி அமைத்து, யாழ்ப்பாணம் நோக்கி செல்பவர்களையும், யாழ்ப்பாணத்தி லிருந்து வருபவர்களையும், ஒருவர் மட் டுமே செல்லக்கூடிய, போக ஒன்று, வர ஒன்று என இரும்புக் கம்பி வலைப் பாதையில் மெட்டல் டிடெக்டர் உட்பட எல்லா சோதனைகளும் செய்துதான் அனுப்புகிறது.
அதுபோல பஸ், லாரி, வேன் போன்றவைகளில் வரும் எல்லா வித மான பொருட்களும் விரிவான சோதனை செய்தே அனுப்பப்படுகின்றன.இதுபோல 10 கிலோ மீட்டருக்கு ஒன்று என மாங்குளத்தில் இலங்கை ராணுவத்தின் 561வது படைப்பிரிவு, மஞ்சள்பட்டியில் 15வது பிரிவு, கிளி நொச்சி மாவட்ட தலைநகரில் 571வது பிரிவு, ஆனையிறவு முக்கிய சாலையில் மிகப்பெரிய அளவு 55வது பிரிவு, குறிஞ்சித்தீவின் இயக்கட்சியில் 552வது பிரிவு, பனங்காடு கொடியக மத்தில் 523வது பிரிவு, சாவச்சேரியில் 593வது பிரிவு, அரியாலையில் 512வது பிரிவு என யாழ்ப்பாணம் மாவட்டத்தைச் சுற்றிலும் காரைத்தீவு, எழுவைத்தீவு, நைனாதீவு, நெடுந்தீவு, வெல்லணை தீவு, பூன் குடுதீவு, மண்டதீவு, கார தீவு, குறிஞ்சி தீவு என ஒன்பது தீவுகள் இருப் பதாலும், ஆனையிறவு அருகாமையி லுள்ள முஸ்லியனில் இருந்து வட மேற்கே 60 கி.மீ தூரத்தில் உள்ள கொக் குவில் வரை கடல் உள் புகுந்துள்ளதால் பல ராணுவ படைப்பிரிவுகளும், இலங்கை கடற் படையின் பலபிரிவுகளும் பலமாக முகாமிட்டு சோதனைச் சாவடிகள் அமைத்து, சோதனை செய்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
இதே நிலைதான் தமிழர்கள் வாழும் எல்லா மாவட்டங்களிலும் இருக்கிறது.பாதுகாப்புக் காரணத்திற்காக இருபுற மும் பிரதானச் சாலை உட்பட எல்லா சாலைகள் மட்டுமல்லாது, நகரங்க ளிலும், கிராமங்களிலும் தமிழர்களின் வீடுகளை காலி செய்து, முகாம்களுக்கு அனுப்பி உள்ளனர். வீடுகள் மட்டுமல்ல, பள்ளிக் கூடங்கள், அரசு அலுவலகங் கள், மருத் துவமனைகள் உட்பட அதன் சுவர்களில் துப்பாக்கி ரவைகள் சல் லடை பதித்தது போன்று காணப்படு கிறது. டேங்கர் மூலம் கட்டிடங்களை உடைத்து நிரவியுள்ளனர். கடைகள், விவசாய நிலங்களிலிருந்தும் தமிழர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.சாலையின் இருபக்கமும் “கண்ணி வெடி அபாயம்”, தடைசெய்த பகுதி என மஞ்சள் பிளாஸ்டிக் பேப்பரில் கருப்பு நிறத்தில் எழுதி ரிப்பன் மாதிரி சாலை முழுவதும் நெடுந்தொலைவு கட்டியுள் ளனர். அந்த பகுதி முழுவதுமே ராணுவத் தின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. நெடுஞ் சாலையில் உள்ள கடைகளை ராணுவத் தினர்தான் நடத்தி வருகின்றனர்.
ஆகவே, இதுபோல சகலத்தையும் இழந்து, எப்போதும் துப்பாக்கி முனை யிலேயே தமிழ் மக்கள் வாழ முடியாத கட்டாயச் சூழ்நிலைமை ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் ராணுவத்தினர், கப்பற் படையினர் மக்களை தாக்கியதாக தினசரி செய்தி, செய்தித்தாள் மூலம் வந்து கொண்டுதான் இருக்கின்றன. கப்பற் படையினர் பல இடங்களில் கடல் பகுதி களில் இரும்புக் கம்பி வலை தடைகளை ஏற்படுத்தி மீன்பிடிக்கப் போக முடியாத அளவு தடை செய்துள்ளனர்.ஆட்சியாளர்களின் தகிடுதத்தம்இலங்கைத் தமிழர் பிரச்சனை இரண்டு முக்கிய அம்சங்களில் தீர்வு காணப்பட வேண்டும் என்பது சர்வதேச சமூகம் உட்பட எல்லோரும் ஏற்றுக் கொண்ட முக்கியமான முடிவாகும். அவைகளில் ஒன்று, இறுதியாக நடை பெற்ற 4 பெரும் போர்களிலும், இலங்கை அரசும், இலங்கை ராணுவமும் படுபாத கமான போர்க்குற்றங்கள் செய்துள்ளன.
ஆகவே போர்க்குற்றங்களை கண்டறிய இலங்கை அரசு “உண்மைகளை கண்ட றியும் நல்லிணக்க ஆணைக்குழு” அமைத்து அது விசாரித்து இடைக்கால அறிக்கையும், இறுதி அறிக்கையும் கொடுத்துள்ளது. இதனடிப்படையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண் டும். ஆனால் போர்க் குற்றம் செய்ய வில்லை என அரசு சாதித்து வருகிறது. இரண்டாவது “இலங்கைத் தமிழர்க ளுக்கு அதிகாரப் பகிர்வு” தொடர்பாக இலங்கை அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண்பது என்பதில் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடந்த பின்னர் 6 மாதங்களுக்கு மேலாக எதுவும் கூறாது அரசு மௌனம் சாதித்து வருகிறது. முக்கியமான இந்த இரண்டு பிரச்சனை களிலேயும் இலங்கை அரசு தீர்வு காண மார்க்கம் ஏற்படுத்துவதாக தெரியவில்லை. அறிக்கையும் பரிந்துரையும்போர்க்குற்றம் குறித்து உண்மை கண்டறியும் நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கை பின்வருமாறு: ¬இந்த அறிக்கை யுத்தத்தின் போது யுத்த நிகழ்விடத்தில் பெருந் தொகை யான பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பாகவும், யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் செய்யப்பட்ட யுத்தக் குற் றங்கள் தொடர்பாகவும், முற்றுமுழுதாக அரசையும், பாதுகாப்புப் படையினரையும் குற்றமற்றவர்கள் என தெரிவித்திருக்கிறது. ¬யுத்தத்தில் பொதுமக்கள் கொல்லப் பட்டமை தெரிந்தே மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றம் அல்ல. திருப்பித் தாக் கியதன் விளைவு தான் என அரசை காப் பாற்றவே தெரிவித்துள்ளது.
¬யுத்த பூமியிலிருந்து வெளிவந்த போது கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக் கானோருக்கு சாட்சியம் அளிக்க சந்தர்ப் பம் வழங்கவில்லை. ¬வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றோ ருக்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. ¬பெண்கள் தாங்கள் பெண்களாக இருந்த காரணத்தாலேயே தங்கள் மீது இழைக்கப்பட்ட பாலியல் கொடுமைகள் குறித்து சாட்சியம் அளிக்க சந்தர்ப்பம் அளிக்கவில்லை. இப்படி கொடூரமான குற்றங்கள் யுத்தத்தின் போது நடைபெற்றிருப்பதாகத் தெரிய முடிகிறது. இருப்பினும் அது சில சிபாரிசுகளை கொடுத்துள்ளது. யுத்தக்குற்றங்கள் இடம்பெற்றுள் ளதை ஏற்றுக் கொள்ளும் நிலை ஏற்பட் டுள்ளது. சேனல் 4 வெளியிட்டவைகள் குறித்து ஆராய சிபாரிசு செய்துள்ளது. ¬சிற்சில படையினர் யுத்தக் குற்றம் மற் றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் களா என ஆராய சிபாரிசு செய்துள்ளது. ¬மக்கள் பாதிப்புகளுக்கு அரசு நட்ட ஈடு வழங்க வேண்டும். மன்னிப்புக் கேட் கும் நிலை எழுந்துள்ள விஷயங்களில் தெரிவிக்க வேண்டும்.
தொடர்ந்து படையினர் மக்களின் சொத்துக்களை ஆக்கிரமித்திருப்பதும், படையினரும், துணைப்படையினரும் ஆட்களை காணாமல் போக செய்திருப் பார்களானால் அப்படையினரை உடனடி யாக நீக்க வேண்டும்.¬படையினர் சகலவிதமான சிவில் நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப் பட்டு அவற்றை முழுமையாக காவல் துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும். ¬உயர் பாதுகாப்பு வளையங்களுக்காக கைப்பற்றிய நிலங்களை மீண்டும் மக்க ளிடம் கொடுக்க வேண்டும். தாங்கள் வாழ்ந்த பிரதேசத்திலேயே மீண்டும் குடி யமர்த்த வேண்டும். சொத்துக்களின் உரி மைகள் முறைப்படி வழங்கப்பட வேண்டும். ¬இதிலும் அரசியல் தீர்வு முக்கிய மானது. அடிமட்ட தேவைகளை வழங்கக் கூடிய மாகாண பிரதிநிதிகளுடன் கூடிய இரண்டாவது பிரதிநிதிகள் சபையை உருவாக்கவும் சிபாரிசு செய்துள்ளது. இவையாவும் சர்வதேச சமூகத்திற்கு முன்னால் தன் மானத்தை காப்பாற்றிக் கொள்ள முதலாளிகளின் ஆலோச னைப்படி வைக்கப்பட்டதாகவே பலரும் கருதுகின்றனர். இது தொடர்பாக “சர்வதேச விசா ரணை வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டுள் ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
அதிகாரப் பகிர்வு இனப்பிரச்சனைக்கு தீர்வு குறித்து இலங்கை அரசு இந்தியாவுக்கு ஒன்றை கூறுகிறது; மேற்கு உலக நாடுகளுக்கு வேறு ஒன்றை கூறுகிறது. இந்த விஷயத்தில் அரசு இதய சுத்தியுடன் செயல்பட மறுப் பதையே காட்டுகிறது. குறிப்பாக மிகச்சமீபத்தில் இலங்கை நாடாளுமன்றத்தில் நிதிநிலை அறிக் கையின் மீது பேசிய அந்நாட்டு ஜனாதி பதி, நிலம், நிர்வாகம், காவல்துறை ஆகிய வற்றின் மீதான எந்த அதிகாரமும் மாகாண சபைகளுக்கு அளிக்கப்போவ தில்லை என்பதை உறுதியுடன் கூறியி ருந்தார். அதே போல், தமிழர்கள் பகுதி களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாம்கள் ஒருபோதும் அகற்றப்பட மாட் டாது எனவும் கூறியிருந்தார். அது அந் நாட்டு நாளிதழ்களிலும், இணையதளங் களிலும் தெளிவாக வெளியிடப்பட்ட செய்திகளாகும். அது மட்டுமல்லாது, அதிகாரப் பகிர்வு குறித்து அரசின் திட்டம் என்ன என்பதை தெரிவிக்க வேண்டும் என தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு கேட்டதற்கு, அதைப் பற்றியெல்லாம் அறுதியிட்டுக் கூற முடி யாது என அந்நாட்டு அரசு மறுத்துள்ளது.
மேலும் இந்திய வெளியுறத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் இலங்கை அரசமைப்புச் சட்டத்தில் 13வது திருத்தம் செய்து அதிகாரப்பகிர்வு செய்வோம் என கூறியுள்ளார். ஆனால் இலங்கையில் சமீபத்தில் வந்த செய்தி களில் “அரசமைப்புச்சட்டம் 13வது திருத்தம் பிளஸ்” செய்து தீர்வு காண் போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து 13வது திருத்தம் பிளஸ் என்றால் என்ன என்று கேட்டதற்கு, நாடாளுமன்ற மேலவை அமைத்து (செனட் சபை) தமிழர்களுக்கு கூடுதல் பிரதி நிதித் துவம் அளிப்பதே என்று இலங்கை அர சின் செய்தித்தொடர்பாளர் கெஹலிய ரம்புக் வெல்ல கூறியுள்ளார். தமிழர்கள் கேட்பது தமிழர்கள் வாழும் இரண்டு மாகாணங்களுக்கும் சமஉரிமை தரவல்ல முழுமையான அதிகாரப் பகிர்வு. ஆனால் இலங்கை அரசு பேசுவது வெற் றுப் பிரதிநிதித்துவமாகும். இதை ஒரு
போதும் ஏற்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது. அதுபோல தமிழர்கள் வாழும் வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் இணைப்பு என்பது ஏற்கனவே அந்நாட்டு உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்ட ஒன்றாகும். இதை இந்தியாவின் மத்திய அரசு வலியுறுத்துவதையும் யாரும் விரும்பவில்லை. வடக்கு மாகாணம், கிழக்கு மாகாணம் இரண்டுக்கும் சமமான சுயாட்சித் தன்மை வாய்ந்த அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும் என்பதே இன்று பல்வேறு தமிழ் அமைப்புகள், மற்றும் தமிழர்களின் வேட்கையாக உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: