நாமக்கல், மார்ச் 2-
தடையில்லா மின்சாரம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தடையில்லா மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். வெங்காயம் மூட்டை ஒன்றுக்கு ரூ.2ஆயிரம் வழங்க வேண்டும். குச்சிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.9ஆயிரம் வழங்க வேண்டும். மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். கரும்பு டன்னுக்கு ரூ.3ஆயிரம் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்டத்தில் 4 மையங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பரமத்தி வட்டம் ஜேடர்பாளையம் மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஆர்.குழந்தைவேல் தலைமை வகித்தார். தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் எஸ்.நல்லாகவுண்டர், விவசாயிகள் சங்க துணை தலைவர் எ.ஆதிநாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். விதொச கே.தங்கமணி, ஆர்.வேலாயுதம், கே.முத்துசாமி கவுண்டர், கே.பாலசுப்ரமணியம், பி.பரமசிவம், கே.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.எருமப்பட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.செலாமலை தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் பி.பெருமாள் சிறப்புரையாற்றினார். எம். ராஜேந்திரன், டி.முருகேசன், மு.து.செல்வராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மோகனூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மணப்பள்ளி பெருமாள் தலைமை வகித்தார். சி.ரங்கசாமி, பி.ராமசாமி, வி.பி.கருணாநிதி, பி.ஜெயமணி மற்றும் கா.மு.காளியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வெப்படை 4 ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பி.ராமசாமி தலைமைவகித்தார். எஸ்.தனபால், பி.சண்முகம் உள்ளிட்டபலர் கலந்து கொண்னர்.

Leave A Reply

%d bloggers like this: