திருவள்ளூர், மார்ச், 2 –
திருவள்ளூர் மாவட் டம் தாமரைப்பாக்கம் அரு கில் உள்ள சிவன்வாயல், கோயம்பாக்கம் மேல கொண்டையார், வதட்டூர், வெள்ளியூர், கீழானூர் ஆகிய பகுதிகளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண் டும் என வலியுறுத்தி மார்.2 அன்று தமிழ்நாடு விவசா யிகள் சங்க சென்னை புற நகர் மாவட்டக் குழு சார் பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. தமிழக அரசு கிராமப் புறங்களில் நாள் ஒன்றுக்கு 4 மணி நேரம் மின்வெட்டு இருக்கும் என அறிவித்தது. ஆனால் நடைமுறையில் 8 மணி நேரம் மின்தடை ஏற் படுகிறது. இதனால் பள்ளி மாணவர்கள் மட்டுமல்லா மல் விவசாயமும் கடுமை யாக பாதிக்கிறது. இதனால் சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கீழானூர் துணை மின் நிலை யம் முன்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதற்கு சென்னை மாவட்ட புறநகர் விவசாயி கள் சங்க மாவட்டக் குழு உறுப்பினர் என். தசரதன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மா.தா. பால்ராஜ், மாவட் டக் குழு உறுப்பினர்கள் ஆர். ராமலிங்கம், ஆர். ராம கிருஷ்ணன், ஜி. செல்வம், பாபு, இ. கிருஷ்ணன், சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப் பினரும் கவுன்சிலருமான ஜி. சம்பத் ஆகியோர் பேசி னர். 50 பெண்கள் உட்பட 300க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்ட னர். பண்டி காவனூர் முன் னாள் பஞ்சாயத்துத் தலை வர் சி. கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.