சேலம், மார்ச்.2- சேலத்தில் விதிமுறைகளை மீறி இயங்கிய சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன.திருப்பூரில் சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டதால் அங்கிருந்த பட்டறை அதிபர்கள் சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களை குத்தகைக்கு எடுத்து சாயப்பட்டறைகளை நடத்தி வந்தனர். சேலம் மாவட்டத்தில் இடைப்பாடி, மேட்டூர்,சிவதாபுரம் ஆகிய பகுதிகளில் சுத்திகரிப்பு நிலையம் இல்லாமல் இயங்கி வந்த சாயப்பட்டறைகளை சில நாட்களுக்கு முன்பு அதிகாரிகள் இடித்து தள்ளினார்கள்.மேலும் சாயப்பட்டறைகளையும் தீவிரமாக கண்காணித்து வந்தனர்.இந்த நிலையில் மாசுக் கட்டுப்பாடு பொறியாளர் பாண்டியன், உதவி பொறியாளர் சரவணக்குமார் உத்தரவின்பேரில் நெய்க்காரபட்டி, உத்தமசோழபுரம், செவ்வாய்ப்பேட்டை ஆகிய பகுதிகளில் இயங்கி வந்த 3 சாயப்பட்டறைகளை அதிகாரிகள்இடித்து தள்ளினார்கள். மேலும் 9 இயந்திங்களும் நொறுக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு ரூ.50 லட்சமாகும்.விதிமுறைகளை மீறி செயல்படும் சாயப்பட்டறைகள் கண்டுபிடிக்கப்பட்டால் அவை இடித்து தள்ளப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: