பொது மக்கள் குறித்து அஜெர்பைஜானில் உள்ள குபா ஆளுநர் தொலைக்காட்சியில் தெரிவித்த கருத்துக்கு எதிராக குபா மாகாணத்தில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆளுநர் ரப் ஹபிபோவ் மற்றும் போக்குவரத்து அமைச்சர் ஜியா மம்மடோவ் ஆகிய இருவரும் மன்னிப்புக் கோரியுள்ளனர். ஆனால் அவர்கள் பதவியை விட்டு வெளியேற வேண்டும் என்று கருத்து எழுந்துள்ளது. இந்நிலையில் ஆர்ப்பாட்டங்களை ஒடுக்கும் வகையில் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டு களை வீசினர்.
* * *
சிரியாவில் வெளிநாட்டு சக்திகளின் உதவியுடன் இயங்கிவரும் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பலி யான வெளிநாட்டு பத்திரிகையாளர்களின் உடல்கள் கிடைத்துள்ளன. சிரியாவின் ஹோம்ஸ் மாகாணத்தில் உள்ள பாபா அமர் என்ற இடத்தில் மூன்று பத்திரிகை யாளர்கள் கடந்த வாரத்தில் கொல்லப்பட்டனர். மேரி கோல்வின், ரெமி ஓச்லிக் மற்றும் காஃபியர் எஸ்பினோசா ஆகிய மூன்று பத்திரிகையாளர்களின் உடல்களும் பாபா அமர் பகுதியிலேயே தகனம் செய்யப்பட்டன.
* * *
மெக்சிகோவிலிருந்து குழந்தைகள் கடத்திச் செல்லப் படுவது பெருமளவில் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் இந்தக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஏராளமான விப ரங்களைக் காவல்துறையினர் பெற்றிருக்கிறார்கள். 1980களில் இருந்தே மெக்சிகோவிலிருந்து குழந்தைகள் வெளிநாடுகளுக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்கள். ஏழைப் பெற்றோர்களை வலையில் சிக்க வைத்துத் தங்கள் வேலையை கடத்தல்காரர்கள் செய்தும் வந்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.