~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆருஷி கொலை வழக்கு கோரிக்கை மனு நிராகரிப்பு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புதுதில்லி: ஆருஷி கொலை வழக்கை காசியாபாத் நீதிமன்றத்தி லிருந்து தில்லி நீதிமன்றத்திற்கு மாற்று மாறு கோரிய தல்வார் தம்பதியினரின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிரா கரித்தது.காசியாபாத் நீதிமன்றத்தில் போது மான பாதுகாப்பு உள்ளது. தல்வார் தம் பதியினருக்கு சிரமமாக உள்ளது என் பதற்காக வழக்கை தில்லி நீதிமன்றத்திற்கு மாற்ற இயலாது என்று தெரிவித்த நீதி பதிகள் பி.எஸ். சவுகான் மற்றும் ஜே.எஸ். கேஹர் ஆகியோர் அடங்கிய உச்சநீதி மன்ற அமர்வாயம் தல்வார் தம்பதியின ரின் மனுவை நிராகரித்தது.2008ம் ஆண்டு 15ம் தேதி ஆருஷி தல் வார் மர்மமான முறையில் கொலையுண் டார். மேலும் தல்வார் தம்பதியினரின் வீட்டில் பணிபுரிந்து வந்த வேலைக்காரர் ஹேம்ராஜின் உடல் மறுநாள் கண்டு பிடிக்கப்பட்டது. இவ்வழக்கில் ஆருஷி யின் பெற்றோர்கள் மீது குற்றம் சுமத்தப் பட்டு வழக்கு நடந்து வருகிறது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
இந்திய ஒலிம்பிக் சங்கத்தலைவராககல்மாடி நீடிப்பாராம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
புதுதில்லி : காமன்வெல்த் ஊழலில் குற்றம்சாட்டப்பட்டது தொடர்பாக நெருக்கடி எழுந்துள்ள நிலையில் இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக சுரேஷ் கல்மாடி தொடர்ந்து நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் கூறுகையில், கல்மாடி தனது அதிகாரங் களை பயன்படுத்த மாட்டார் என்றும் வி.கே.மல்ஹோத்ரா தொடர்ந்து கெயில் தலைவராக இருப்பார் என்றும் தெரி வித்தது.இதுதொடர்பாக கல்மாடி அளித்த 2 கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக மல்ஹோத்ரா தெரிவித்தார்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
கருணாநிதியின் பாதுகாப்பு அதிகாரிகள் வீடுகளில் ரெய்டு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சென்னை: திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதி யின் பாதுகாப்பு அதிகாரிகள் 3 பேரின் வீடுகள் மற்றும் அவர்களது உறவினர் களின் வீடுகளில் வெள்ளியன்று லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தி னர். முறைகேடாக வீட்டு மனை, வீடுகள் பெற்றது தொடர்பாகவும், வருமானத் திற்கு மீறிய வகையில் சொத்து சேர்த்த தாகவும் இந்த ரெய்டு நடத்துவதாக தகவல்கள் தெரிவித்தன.கடந்த 2008ம் ஆண்டு முறைகேடாக வீட்டு வசதி வாரியத்தின் வீடுகளையும், வீட்டு மனைகளையும் இவர்கள் பெற்ற தாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
பத்மநாபசாமி கோவில் :
105 தங்கக் குடங்களின் பரிசோதனை நிறைவு
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் ரகசிய அறை களில் பொக்கிஷங்களை மதிப்பிடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பொற்குவியலில் உள்ள 105 தங்கக் குடங் களின் பரிசோதனை மற்றும் மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.திருவனந்தபுரம் கோவிலில் உள்ள 5 ரகசிய அறைகள் உச்சநீதிமன்ற உத்தரவுப் படி திறந்து பார்க்கப்பட்டது. அப்போது அந்த அறைகளுக் குள் ரூ.1.5 லட்சம் கோடிக்கும் மேற்பட்ட அரிய வகை பொற்குவியல் இருப்பது தெரிய வந்தது.அதைத் தொடர்ந்து, அந்த அரிய பொக்கிஷங்களை டிஜிட்டல் முறைப் படி அதி நவீன உபகரணங்கள் உதவியு டன் துல்லியமாக மதிப்பிட்டு பட்டியல் தயாரிக்கும் பணிகள் கடந்த மாதம் 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
‘ஏ’ முதல் ‘எப்’ வரை பெயரிடப் பட்டுள்ள 6 ரகசிய அறைகளில் முதலில் ‘இ’ மற்றும் ‘எப்’ என்ற இரு அறைகள் திறக்கப்பட்டு அங்கு இருந்த பொருட்கள் மதிப்பிடப்பட்டன.அந்த ரகசிய அறைகளில் கோவில் தினசரி தேவைக்கான தங்கம் மற்றும் வெள்ளியிலான பாத்திரங்கள், குத்து விளக்குகள், தட்டுகள் உள்ளிட்ட பொருட்கள் இருந்தன. இந்த பொருட் கள் பற்றிய தகவல்- விவரங்கள் ‘சர்வர்’ கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டன.சி மற்றும் டி அறைகள்‘சி’ மற்றும் ‘டி’ என்று பெயரிடப் பட்டுள்ள அறைகளை உச்சநீதிமன்ற அனுமதியுடன் திறந்தனர்.
இந்த இரண்டு அறைகளில் உள்ள பொருட்களை மதிப்பிடும் பணி நடைபெற்று வருகிறது.இந்த அறைகளுக்குள் கோவில் தின சரி தேவை மற்றும் சிறப்பு பூஜை களுக்கான பொருட்கள் உள்ளன. அதில் தங்கத்திலான பெரிய குடங்கள் அடங் கும். இந்த அறையில் இருந்த 105 தங்கக் குடங்களின் மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்தன.ஒவ்வொரு குடமும் சுமார் மூன்றரை கிலோ எடை கொண் டவையாகும். இந்த குடங்களில் எண்கள் எழுதப்பட்டுள்ளன. மலையாளம் மற்றும் தமிழ் மொழிகளில் உள்ள எழுத்துக்களும் இவற்றில் உள் ளன. இது, குடங்களின் பழமை மற்றும் வரலாற்று முக்கியத்துவத்தை வெளிப் படுத்துகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.