சென்னை, மார்ச். 2-
சென்னையில் காய்கறி விலை கடந்த 2 மாதமாக குறைந்திருந்தது. ஆனால் இப்போது திடீரென எல்லா காய்கறிகளின் விலையும் அதிகரித்து விட்டது. வெங்காயத்தை தவிர மற்ற அனைத்து காய்கறி களின் விலையும் 40 சதவீ தம் அதிகமாக உள்ளது. சென்னையில் உள்ளூர் கடைகளில் வெள்ளியன்று விற்கப்பட்ட காய்கறி விலை (கிலோவுக்கு) வருமாறு: கத்தரிக்காய் ரூ. 24, வெண் டைக்காய் ரூ. 36, பாகற்காய் ரூ. 24, புடலங்காய் ரூ. 30, தக்காளி ரூ. 24, கேரட் ரூ. 28, பீட்ரூட் ரூ. 20, முள்ளங்கி ரூ. 20, நூல்கோல் ரூ. 20, உருளை ரூ. 18, பீன்ஸ் ரூ. 50, அவரைக்காய் ரூ. 28, பச்சை பட்டாணி ரூ. 50, மாங்காய் ரூ. 50, எலுமிச்சை பழம்1 ரூ. 4, சேனை ரூ. 20, கோஸ் ரூ. 16, ப.மிளகாய் ரூ. 24, பெரிய வெங்காயம் ரூ. 10, சிறிய வெங்காயம் ரூ. 20 ஆக இருந்தது.காய்கறி விலை உயர்வு குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், மழை காலம் முடிந்ததும் காய்கறி விளைச் சல் அதிகமாக இருந்தது. ஆனால் தற்போது கோடை காலம் தொடங்கி விட்ட தால் உற்பத்தி குறைந்து விட்டது. தானே புயல் காரணமாக விழுப்புரம், கடலூர், திருவண்ணா மலை மாவட்டங்களில் நிறைய செடிகள் அழிந்து விட்டன. சென்னைக்கு அங் கிருந்து தான் காய்கறி வரு கிறது. தற்போது வரத்து குறைந்துள்ளதால் காய்கறி விலை உயர்ந்து வருகிறது என்றார்.

Leave A Reply