நாகர்கோவில், மார்ச் 2-
குமரி மாவட்டத்தில் சமீப காலமாக சட்டம்- ஒழுங்கு சீர்கெட்டுள்ளது. கொலை, கொள்ளை, வழிப்பறி என பலவிதமான பிரச்சனைகளும் தலைவிரித்தாடுகின்றன. இதனால், காவல்துறையால் இரவில் ஆள் நடமாட்டம் தடுக்கப்படுகிறது. இரவு நேரக் கடைகள் மூடப்பட்டுள்ளன. வெளி மாநிலத்தவர்கள் கணக்கெடுக்கப்பட்டு வருகின்றனர். ஆயினும் குற்றச் சம்பவங்கள் வழக்கம்போல நிகழ்கின்றன. இதற்கு மிக முக்கிய காரணம் இரவுநேர மின்வெட்டு எனக் கூறப்படுகிறது. எது, யார் காரணம் என்பது ஒருபுறமிருந்தாலும் பொதுமக்கள் நிம்மதி இழந்து சிறிது காலம் ஆகிவிட்டது என்பதே உண்மை. இந்நிலையில், வெள்ளியன்று அதிகாலையில் வடசேரி கீழ வெள்ளாளர் தெருவில் வசிக்கும் சரோஜா, தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, அவரது தங்கச் சங்கிலியை மர்ம ஆசாமி பறித்துள் ளார். அப்போது விழித்துக் கொண்ட சரோஜா சங்கிலியை பிடித்துக் கொண்டு சத்தமிட்டார். இதனால் சங்கிலி கீழே விழந்தது. இதற்கிடையே சரோஜாவின் சத்தம் கேட்டு வீட்டார் வருவதற்குள் அந்த மர்ம ஆசாமி ஓடிவிட்டார். இதனிடையே அதே பகுதியைச் சார்ந்த நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் கலைவாணனின் வீட்டிலும், பூட்டியிருந்த மேலும் 2 வீடுகளிலும் திருட்டு நடைபெற்றுள்ளது.

Leave A Reply