காஞ்சிபுரம், மார்ச் 2-
சிவசக்தி உட்ஒர்க்ஸ் நிறுவனத்தில் தொழிலாளர் நலனை காக்கத் தமிழக அரசு தலையிட வேண்டு மென சிஐடியு வலியுறுத்தி யுள்ளது.இதுகுறித்து சிஐடியு காஞ்சிபுரம் மாவட்டத் தலை வர் எஸ்.கண்ணன், செயலா ளர் இ.முத்துக்குமார் வெளி யிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:மறைமலைநகர் பகுதி யில் அமைந்துள்ள சிவசக்தி உட்ஒர்க்ஸ் நிறுவனம். இங்கு 120 தொழிலாளர்கள் பணியாற்றுகிறார்கள். 4 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் தொழிலாளர் களுக்கு சம்பள உயர்வு வழங் கப்பட வில்லை. சம்பளத் தில் பிடித்தம் செய்த இஎஸ்ஐ., வருங்கால வைப்பு நிதி ஆகிய வற்றை சம்பந்தப்பட்ட அலு வலகங்களில் நிர்வாகம் செலுத்தவில்லை. இதனால், இங்கு பணிபுரியும் தொழி லாளர்களுக்கு மருத்துவச் சிகிச்சையோ, வருங்கால வைப்பு நிதியின் பலனோ கிடைக்காமல் இருந்தது.இதுகுறித்து நடவடிக்கை எடுக்க, தொழிலாளர்கள் சிஐ டியுவில் தங்களை இணைத் துக் கொண்டனர். கடந்த 10 மாத காலத்தில் பல்வேறு தொடர் போராட்டங் களின் காரணமாக, இஎஸ்ஐ யும், வருங்கால வைப்பு நிதி யும் செலுத்தப்பட்டது. ஆனால், சம்பள உயர்வு வழங்கப்பட வில்லை. சம்பள உயர்வு வழங் காத நிர்வாகம் தொழிலா ளர்களின் ஒற்றுமையை சிதைக்கும் வண்ணம் ஐஎன் டியுசி சங்கத்தை வலிய திணித்தது. ஆனால், 95 சதமான தொழிலாளர்கள் சிஐடியுவிலேயே தொடர்ந் தனர். இதனால், ஆத்திர மடைந்த நிர்வாகம், சிஐடியு சங்கத்துடன் பேசுவதையும், தொழிலாளர் நலனை புறக் கணிப்பதையும் தொடர் நட வடிக்கையாகக் கொண்டி ருக்கிறது.2011ம் ஆண்டுக்கான தீபாவளி போனஸ் இது வரை வழங்கப்படவில்லை. டிசம்பர், ஜனவரிக்கான தொழிலாளர்களுக்கு வழங் கப்படவில்லை. கடந்த ஒரு மாத காலமாக நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வேலை தராமல், சம்பளமும் தரா மல் தொழிலாளர் வாழ்க் கையை இருளாக்கி வருகி றது.இதுகுறித்து தொழிலா ளர் நல ஆணையத்தில் எழுப்பப்பட்ட தொழில் தவா வழக்குகளில் அல்லது சமரசப் பேச்சு வார்த்தை களில் நிர்வாகம் தொடர்ந்து பங்கெடுக்காமல் இழுத் தடிப்பு வேலையை செய்து வருகிறது. எனவே, தமிழக அரசும் தொழிலாளர் நலத் துறையும் உரிய வகையில் தலையீடு செய்து தொழிலா ளர்களுக்கான சம்பளத்தை யும், இதர நலன்களையும் பெற்றுத்தர வேண்டுமென சிஐடியு காஞ்சிபுரம் மாவட் டக் குழு வலியுறுத்துகிறது.இவ்வாறு அந்த செய் திக்குறிப்பில் கூறப்பட்டுள் ளது

Leave A Reply