வேலூர், மார்ச் 2-
வேலூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டாட்சியர் அலு வலகங்களில் வாரிசு, சாதிச் சான்றிதழ்களை வழங் காமல் பொதுமக்களை அலைக்கழிப்பதாக அதிகாரி கள் மீது புகார் எழுந்துள்ளது.வங்கி கணக்கு, சொத்துக்கள் பெயர் மாற்றம், பணி யில் இறந்த அரசு பணியாளர்களின் பிள்ளைகள் அரசுப் பணி யில் சேர, பள்ளியில் பிள்ளைகளை சேர்க்க என பல கார ணங்களுக்காக வாரிசு, சாதி மற்றும் வருமானச் சான்றி தழ்கள் கேட்டு வட்டாட்சியர் அலுவலகங் களுக்கு ஏரா ளமான விண்ணப்பங்கள் தினசரி வருகின்றன.அவ்வாறு வரும் விண்ணப்பங்களின்மீது சம்பந்தப் பட்ட பகுதியைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் மூலம் விசாரணை செய்து அறிக்கை அளிக்கப்படும். பின்னர் வரு வாய் அதிகாரிகள் பரிந்துரை செய்து வாரிசு சான்றிதழ் வழங்குவர்.வட்டாட்சியர் அலுவலகங்களில் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்து பல மாதங்கள் ஆகியும் சான்றிதழ் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் சரமாரியாக புகார் தெரிவிக்கின்றனர். அதிகாரிகளின் அலட்சியப் போக்குக் காரணமாக விண் ணப்பங்கள் நூற்றுக்கணக்கில் தேங்கிக் கிடக்கின் றன. இதனால், பல கிராமங்களில் இருந்து வருபவர்கள் சான் றிதழ்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் செல்கின் றனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட துரைராஜ் கூறு கையில், விவரம் தெரிந்த என்னைப் போன்றவர் களையே அதிகாரிகள் பலமுறை அலைய விடுகின்றனர். கிராமப்புறங்களில் இருந்து வரும் எழுதப் படிக்கத் தெரி யாதவர் கள் எவ்வளவு அவதிப்படுவார்கள்? பொது மக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் தலையிட்டுத் தகுதியுள்ளவர் களுக்கு உடனடியாக சான்றிதழ்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.

Leave A Reply