இளைஞர்களின் சக்தியை நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளவேண்டும் – குடியரசுத்தலைவர் பிரதீபா பாட்டீல்.
ச.சா – நாடு என்றால் பெரு முதலாளிகள் என்பதுதானே அரசின் கொள்கை முடிவு…?
* * *
பல மாநிலங்களுக்கு அலைந்து மின்சாரத்தை தமிழகத்திற்குக் கொண்டு வந்து மக்களை நிம்மதியடையச் செய்தது திமுக அரசு – திமுக தலைவர் கருணாநிதி.
ச.சா – மக்களோட கோபத்த நீங்களா கேட்டு எதுக்கு அதிகப்படுத்துக்குறீங்க…??
* * *
கிங்பிஷர் விமானப் போக்குவரத்து நிறுவனம் மூடப்படாது – மத்திய அமைச்சர் அஜித்சிங்.
ச.சா – தனியார் நிறுவனமாச்சே… விட்டுப் குடுப்பீங்களா..??
* * *
நடைமுறை சிக்கல்கள் புரியாமல் அரசின் மீது குற்றம் சாட்டுவது அழகல்ல – மின்வெட்டு பற்றி தமிழக மின்துறை அமைச்சர் விஸ்வநாதன்.ச.சா – பழைய ஆட்சில நீங்க என்ன சொன்னீங்களோ, அதத்தான மக்கள் இப்ப சொல்றாங்க…

Leave a Reply

You must be logged in to post a comment.