பெங்களூர், மார்ச் 2-
பெங்களூர் தனி நீதிமன் றத்தில் நடந்து வரும் சொத் துக் குவிப்பு வழக்கில் தான் சொல்லும் வாக்குமூலத்தை தமிழில் பதிவு செய்ய வேண் டும், வழக்கை விரைந்து விசாரிக்க உத்தரவிட வேண் டும் என்று கோரி சசிகலா தாக்கல் செய்திருந்த மனு வை உச்சநீதிமன்றம் வெள் ளியன்று தள்ளுபடி செய்தது.முதல்வர் ஜெயலலிதா வையும், சசிகலாவையும் ஒன்றாகக் கருத முடியாது; ஜெயலலிதாவுக்குத் தரும் சலுகைகளை சசிகலாவும் கோர முடியாது என்றும் நீதி பதிகள் கருத்து தெரிவித்த னர்.பெங்களூர் நீதிமன்றத் தில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகி யோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை யில் உள்ளது. இதில் முதல் வர் ஜெயலலிதா நான்கு நாட்கள் ஆஜராகி வாக்கு மூலம் அளித்து முடித்து விட்டார். தற்போது சசி கலா வாக்குமூலம் அளித்து வருகிறார். தினசரி சராசரி யாக 50 கேள்விகள் வரை மட்டுமே அவர் பதிலளித்து வருகிறார்.இந்த நிலையில், சசிகலா சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு சிறப்பு விடுப்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பெங்களூர் நீதிமன் றத்தில் நடந்து வரும் விசார ணையை ஆங்கிலத்தில் பதிவு செய்து வருகின்றனர். அதைத் தமிழில் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். மேலும் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க உத்தர விட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.இந்த மனு நீதிபதி சதா சிவம் தலைமையிலான பெஞ்ச் முன்பு வெள்ளியன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்குப் பின்னர் சசிகலாவின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய் தனர். மேலும் சசிகலாவின் கோரிக்கைகளும் நிராகரிக் கப்பட்டன. மேலும் பெங்களூர் நீதி மன்றத்தில் 72 கேள்விக ளுக்கு பதில் அளிக்க 4 நாட்கள் சசிகலா எடுத்துக் கொண்டதற்கும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.7வது நாள்இதற்கிடையே, சசிகலா விடம் பெங்களூர் நீதிமன் றத்தில் வெள்ளியன்று 7வது நாளாக விசாரணை தொடர்ந்து நடைபெற்றது. இன்னும் அவரிடம் 1000 கேள்விகள் வரை கேட்க வேண்டியுள்ளது எனத் தக வல்கள் தெரிவிக்கின்றன. இதனால் மேலும் பல நாட்களுக்கு சசிகலாவிடம் வாக்குமூலம் பெற வேண்டி யிருக்கும் என்று கூறப்படு கிறது.

Leave A Reply

%d bloggers like this: