வேலூர், மார்ச் 2-
அரசு கேபிள் டிவி நிறுவ னத்தின் செயல்பாடுகளை வேகப்படுத்தக்கோரி மார்ச் 21ந் தேதி சென்னையில் கோட் டையை நோக்கி பேரணி நடத்த இருப்பதாக தமிழக கேபிள் இயக்குநர் பொது நலச் சங்க மாநிலத் தலைவர் சகிலன் கூறினார்.வேலூர் மாவட்டம் அரக் கோணம் வட்டம், கேபிள் டிவி இயக்குநர்கள் தொழில் பாது காப்பு கருத்தரங்கம் மற்றும் மாநாடு அரக்கோணத்தில் நடந்தது. முன்னதாக புறப்பட்ட ஊர் வலத்தை மாவட்டத் தலைவர் தனவேல் தொடங்கி வைத் தார். வட்டத் தலைவர் துளசி ராமன் தலைமையில் நடந்த மாநாட்டை மாநில பொதுச் செயலாளர் தாமோதரன் தொடங்கிவைத்து பேசினார்.சித்தேரி கேபிள் டிவி ஆப் ரேட்டர் மறைந்த பிரபாவின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியை, மாநிலத் தலைவர் சகிலன் வழங்கிப் பேசினார்.அப்போது, தமிழகத்தில் 50 ஆயிரம் கேபிள் ஆப்ரேட்டர் கள் உள்ளனர். இதில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் 35 ஆயிரம் பேர் பதிவு செய்துள் ளனர். இதில் தமிழக கேபிள் டிவிஆப்ரேட்டர்கள் பொது நலச் சங்கத்தை சேர்ந்தவர் கள் 15 ஆயிரம் பேர் உறுப்பி னராக உள்ளனர். மேலும், இச் சங்கத்திற்கு ஆதரவாக 20 ஆயிரம் பேர் உள்ளனர்.நாங்கள் அரசு கேபிள் டிவிக்கு ஆதரவாக உள் ளோம் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: