குன்னூர்,மார்ச் 2-குன்னூர் அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள்.குன்னூர் அருகே வெலிங்டன் பாளையத்துக்கு உள்பட்ட பாய்ஸ் கம்பெனி ஒசட்டி சாலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு சாலை சீரமைப்பு பணி நடந்தது. அப்போது குடிநீர் செல்லும் குழாய் துண்டிக்கப்பட்டது. அதை சரி செய்யாமல் பாளைய நிர்வாகம் மெத்தனமாக இருந்தது.இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் வெள்ளியன்று (மார்ச்-2) குன்னூர் உதகை தேசிய நெடுஞ்சாலையில் காலிகுடங்களுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.இதுபற்றி தகவல் அறிந்ததும் பாளைய நிர்வாக அதிகாரி ஸ்டீபன், பாளைய துணைத் தலைவர் பாரதியார், கவுன்சிலர் மார்டீன் ஆகியோர் விரைந்து வந்து குடிநீர் சீராக கிடைக்க ஆவன செய்வதாக உறுதி அளித்ததன் பேரில் சாலைமறியல் கைவிடப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: