புதுதில்லி, மார்ச் 2-
குஜராத்தில் 2002ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை நடந்த 22 போலி என்கவுன்ட்டர் கொலைகள் குறித்து கண் காணிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி பெடி தலைமையிலான குழுவை உச்சநீதிமன் றம் வெள்ளிக்கிழமை நியமித்தது.போலி என்கவுன்ட்டர் கொலைகள் தொடர்பான விசாரணையை மேற்பார்வை யிடவும், கண்காணிக்கவும் நாங்கள் விரும் பியதால் நீதிபதி பெடி தலைமையில், விசா ரணையை கண்காணிக்கும் குழுவை நிய மித்துள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்தது.குஜராத் மாநிலத்தில் நடந்த போலி என்கவுன்ட்டர் கொலைகள் குறித்த பட்டியலும் நீதிமன்றத்தில், ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த போலி என்கவுன்ட்டர்கள் குறித்து கண்காணிக் கக் குழுவை அமைத்துள்ளோம் என உச்ச நீதிமன்ற பெஞ்ச்சின் நீதிபதிகள் ஆப்hதாப் ஆலம் மற்றும் ரஞ்சனா பிரகாஷ் தேசாய் ஆகியோர் தெரிவித்தனர்.கண்காணிப்புக்குழுத் தலைவர் நிய மனம் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண மார்ச் 12ம் தேதி வரை அவகா சம் அளிக்கவேண்டும் என, அரசு கோரி யது. இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், கண்காணிப்புக்குழுத் தலைவராக பெடி யை நியமனம் செய்தது. அவருக்கு குஜராத் அரசு முழு வசதிகள், ஒத்துழைப்பும் அளிக்கவேண்டும் என வலியுறுத்தியது.
கண்காணிப்பு ஆணையம், தனது இடைக்கால அறிக்கையை 3 மாத காலத் தில் தாக்கல் செய்யும் என்றும் பெஞ்ச் தெரி வித்தது.கடந்த ஜனவரி 25ம் தேதி பிறப்பித்த உத்தரவின் அனைத்து சாராம்சங்கள் செயல்பாட்டில் இருக்கும் என்றும் நீதிமன் றம் தெளிவுபடுத்தியது.போலி என்கவுன்ட்டர் கண்காணிப்பு ஆணையத் தலைவராக இருந்த உச்சநீதி மன்றத்தின் முன்னாள் நீதிபதி எம்.பி.ஷா திடீரென அப்பதவியிலிருந்து விலகிய தற்கு, உச்சநீதிமன்றம் தனது அதிருப்தி யைத் தெரிவித்தது.கண்காணிப்புக் குழுவுக்கு மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி கே. ஆர்.வயாசை குஜராத் அரசு, உச்சநீதிமன்ற ஆலோசனை இல்லாமல் நியமனம் செய் தது. இதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
ஜனவரி 25ம் தேதியன்று உச்சநீதிமன் றம் கூறுகையில், கண்காணிப்புக்குழு 3 மாத காலத்தில் இடைக்கால அறிக்கை யைத் தாக்கல் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தியது.மூத்த நீதிபதி பிஜி வர்கீஸ் மற்றும் கவிஞர் ஜாவித் அக்தர் ஆகியோர் தாக்கல் செய்த பொதுநலன் வழக்கு மனுக்களில், சிபிஐ போன்ற தன்னாட்சி அமைப்பு விசா ரணை செய்தால் போலி என்கவுன்ட் டர்கள் குறித்த உண்மைநிலை தெரிய வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்களை விசாரணை செய்யும் உச்சநீதி மன்ற பெஞ்ச், விசாரணை கண்காணிப்புக் குழு தலைவரை நியமனம் செய்துள்ளது.
போலி என்கவுன்ட்டரில் கொல்லப்பட் டவர்கள் குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு தர மத்திய அரசு, குஜராத் அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என வர்கீஸ் தனது மனுவில் வேண்டு கோள் விடுத்திருந்தார்.2002ம் ஆண்டு அக்டோபர் மாதம் கிரிமினல் என குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்பட்ட சமீர்கான் கொலை குறித்த பத்திரிகைச் செய்திகள், பத்திரிகை நடத் திய அதிரடி ஆய்வில் பல தகவல்கள் குறிப் பிடப்பட்டு இருந்தன. சமீர்கான் பாகிஸ் தான் ஐ.எஸ்.ஐ. உளவு நிறுவனத்துடன் ரகசிய சதி செய்ததாக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டது. குஜராத் முதல்வர் மோடி யை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய தாக குற்றம் சாட்டப்பட்டது.சமீர்கான் 2002ம் ஆண்டு அக்டோபர் 21 – 22ம் தேதி இரவில் காவலரின் ரிவால் வரை எடுத்தபோது சமீர் கொல்லப்பட்டார் என்ற தகவல் பத்திரிகையில் வந்தது என ஜாவித் அக்தர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

Leave A Reply

%d bloggers like this: