திருவண்ணாமலை, மார்ச் 2-
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங் கலம் அருகே யானை மிதி த்து மேலும் ஒரு விவசாயி பரிதாப மாக உயிரிழந்தார்.ஜவ்வாதுமலை காட்டுப் பகுதியில் 7 யானைகள் அடங் கிய யானைக் கூட்டம் திரி கின்றன. இந்த யானைகள் அடிக்கடி காட்டு பகுதியை யொட்டிய மலை கிராமங் களுக்கு சென்று விவசாய பயிர் களையும் குடிசை வீடுகளை யும் நாசம் செய்து வருகின்றன. பயிர்களை சேதப்படுத்தும் போது விரட்டும் கிராம மக் களையும் யானைகள் விரட்டு வதால் பொதுமக்கள் உயிருக் கும் உத்தரவாதம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.கண்ணமங்கலம் அருகே உள்ள கல்பட்டு கிராமத் தைச் சேர்ந்தவர் பச்சையப் பன் (45). இவர் ஜமுனாமரத் தூர் சென்று விட்டு, 2 பேரு டன் அமிர்த்தி வனப்பகுதி வழியாக ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது யானைக் கூட்டம் பச்சையப்பன் உள்ளிட்ட 3 பேரையும் துரத்தின. அங்கி ருந்து தப்பியோட முயன்றனர். இதில் பச்சையப்பன் தவறி விழுந்ததில் யானை கூட்டத் தில் மாட்டிக் கொண்டார். அவரை யானைகள் மிதித்ததில் அவர் உடல் நசுங்கி அதே இடத்தில் பரி தாபமாக உயிரிழந்தார்.இதற்கிடையில் யானை களிடமிருந்து தப்பியவர்கள் ஊருக்குள் சென்று தகவல் தெரிவித்தனர். இதையறிந்த தும் கிராம மக்கள் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் யானைகள் அங்கி ருந்து சென்று விட்டன. ஒரே மாதத்தில் யானைகள் மிதித்து 4 பேர் பலியானதால் அந்தப் பகுதி பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.யானைகளை விரட்ட இது வரை வனத்துறை மற் றும் மாவட்ட நிர்வாகம் எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை. திருவண்ணா மலை, வேலூர் மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் இந்த மலை கிராமங் கள் அமைந்துள்ளதால் இரு மாவட்ட ஆட்சியர்களும் சம் பவ இடத்திற்கு நேரில் வந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென் றால் போராட்டம் நடத்தவும் தயங்கமாட்டோம் என அந்தப் பகுதி மக்கள் தெரிவித்துள் ளனர்.

Leave A Reply

%d bloggers like this: